பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 475

அவரை எல்லாப் பிரிவு மாணவர்களும், மதிக்கச் செய்தி ருந்தன. தொழுகிற அளவு உயர்த்தியிருந்தன. -

“மாணவிகளில் சரி பாதிக்கு மேல் பயந்து கொண்டு பட்டமளிப்பு விழாப் போராட்டத்துக்கு வரத் தயங்கு கிறார்கள். சஸ்பெண்ட் ஆகிவிடுவோமோ என்றுகூடப் பயப்படுகிறார்கள். என்றாலும் என்னால் முடிந்தவரை நிறையப் பேர்களைச் சேர்த்திருக்கிறேன். அண்ணாச்சி சொல்வதுபோல் அமைதியான எதிர்ப்பு என்றால்தான் மாணவிகள் வருவார்கள், வன்முறை என்றால் ஒதுங்கி விடுவார்கள்” என்றாள் கண்ணுக்கிணியாள். எதிர்ப்பது எப்படி என்பதில் சாத்வீகம், தீவிரம், அதிதீவிரம் என்றெல் லாம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தகுதியற்றதும், முறையற்றதுமாகிய அதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்ச்சி எல்லோருக்கும் இருந்தது. நீண்ட நேரத் தர்க்க விவாதங்களுக்குப் பிறகு அவர்கள் ஒரு பொது முடிவுக்கு வந்து சேர்ந்தார்கள். நாட்டுக்கும் குறிப்பாக மாணவ சமூகத்துக்கும் பல கெடுதல்களைச் செய்துவிட்டவரும் எதற்கோ லஞ்சமாக யாரோ திட்டமிட்டுக் கொடுக்கும் டாக்டர் பட்டத்தைப் பெற வருகிறவருமான அமைச்சர் கரியமாணிக்கத்துக்கும் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் புலப்படுத்துவது என்ற ஒர் அடிப்படையில் எல்லாப் பிரிவு மாணவர்களும் இணங்கி வந்தார்கள். இரவு எட்டு மணிக்கு அவர்கள் கூட்டம் கலைந்தது. மாணவர்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர்களும் வெளியூர் மாணவர்களும் நகர எல்லையிலேயே அமைச்சருக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்தனர். கூட்டம் முடிந்தபின், அண்ணாச்சி, மணவாளன், பாண்டியன், கண்ணுக் கினியாள், மோகன்தாஸ், பொன்னையா ஆகிய ஆறு பேரும் யூனியன் கட்டிட மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது அண்ணாச்சி, “தம்பீ இப்பிடியே எல்லாருமாகக் கோயிலுக்குப் போயிட்டு வரலாம். ஒரு நல்ல காரியத்தைச் செய்யப் பேசி முடிச்சிருக்கோம் சாமிக்கு வேண்டிக்கிட்டுப் போகலாம்” என்றார். மற்ற எல்லாரும் உடனே மோகன்தாஸ் முகத் தைப் பார்த்தார்கள். அவன் அவசரமாகப் பல்கலைக்