பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 சத்திய வெள்ளம்

கழகத்துக்குப் போய் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டி யிருந்தது. என்றாலும் அண்ணாச்சி சொல்லைத் தட்ட முடியாமல் அவனும் இணங்கினான். அந்தத் தெருக் கோடியில் ஒரு சிறு குன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதிதாகக் கட்டப்பட்டிருந்த முருகன் கோயிலுக்குப் போவதற்காகப் பேசிக்கொண்டே நடந்தார்கள் அவர்கள். அப்போது பாண்டியன் அண்ணாச்சியிடம் சொன்னான்: “பொழில் வளவனாரும், பண்புச் செழியனாரும் வகுப்புக் களிலேயே விபூதி குங்குமம் வச்சிக்கிட்டு வர்ற பையன் களைக் கேலி பண்றாங்க. கோயிலுக்குப் போறதைக் கிண்டல் செய்யிறாங்க..”

“பழைய சின்னங்களைக் கேலி பண்றவங்க எல்லாம் தாங்களே புதிய புதிய சின்னங்களை இப்போ அணி யிறாங்களே, தம்பீ! கட்சிக் கொடியிலே கரை போட்ட மேல் துண்டு, கட்சித் தலைவரோட படம் பதித்த மோதிரம், பேட்ஜ்னு அணியிறதெல்லாம் எதிலே சேரும்?” என்று அண்ணாச்சி கோபமாகப் பதிலுக்கு வினவியதும் மணவாளன், “அண்ணாச்சி! இங்கே இன்னிக்கு நம்ம நாட்டிலே உள்ள குறையே அதுதான்! காந்தியும், திலகரும் சுதந்திரப் போராட்டத்திலே இறங்கின காலத்திலே இருந்த தேசபக்தி ஸ்பிரிச்சுவல் நேஷனலிஸம். இப்ப இருக்கிற தேச பக்தியோ வெறும் மெட்டீரியலிஸ்டிக் நேஷன லிஸம்தான். இருபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி எல்லாருமே கோயிலுக்குள்ளே போக முடியாம இருக்கேன்னு குமுறி எல்லாரும் போய்க் கும்பிட உரிமை கோரி ஆலயப் பிரவேசம் வேண்டினோம். இப்போ என்னடான்னா யாருமே கோயிலுக்குப் போகாதீங்கன்னு சிலர் போராட றாங்க. நாட்டின் கலாசாரங்களை அழிய விட்டு விட்டு வெறும் மண்ணை நேசிப்பது மட்டுமே தேசபக்தீன்னு தவறாப் புரிஞ்சிக்கிட்டிருக்காங்க.. தேசம் என்பது வெறும் மண்ணல்ல, மண்ணும் அதன் கலாசாரங்களும் சேர்ந்தது தான் தேசம். மண் மட்டுமே தேசம் என்றால் பாலை வனம்கூடத் தேசமாகிவிட முடியும்” என்றார் மணவாளன். “நல்லாச் சொல்றீங்க, தம்பீ! எங்க நாளிலே தேச பக்தியும் தெய்வ பக்தியும் உள்ளங்கையும் புறங்கையும்