பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 477

மாதிரி பிரிக்க முடியாம இருந்திச்சு. திலகரும் காந்தியும் ஒரு கையிலே கீதையும், மறு கையிலே வெள்ளையனே வெளியேறு என்ற கோரிக்கையுமாக நின்னாங்க. இப்ப இருக்கிற அரசியல்லேயும், பொது வாழ்விலேயும் அந்தரங்க சுத்தி இல்லாமற் போனதுக்குக் காரணமே இந்தத் தலை முறை அரசியல்வாதிகளிடம் இந்தியாவின் அடிப்படை யான ஆன்மீகக் குணங்கள் ஒரு சிறிதும் இல்லாதது தான்னு எனக்குத் தோணுது” என்று கண்களில் ஒளிமின்ன மீசை துடிதுடிக்கப் பதில் சொன்னார் அண்ணாச்சி.

“ஏசுநாதரின் சகிப்புத் தன்மையும், கண்ணனின் கீதைத் தத்துவமும் அல்லாவின் அருளுரைகளும் அடங்கிய ஆன்மிகத் தன்மையோடு கூடி வருங்காலச் சுதந்திர இந்தியா இருக்கணும்னு நெனைச்சார் காந்தி. எல்லா ஜனங்களுக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்கவேணும்னு கனவு கண்டார் நேரு, இன்னும் அவை இங்கே கனவு களாகத்தான் இருக்கு” என்றாள் கண்ணுக்கினியாள்.

“பூதலிங்கம் சார்கூட ஒவ்வொரு பொருளாதார லெக்சரப்பவும் நேருஜியைப் பத்தி நீங்க இப்ப சொல்லற இந்தக் கருத்தைத் தவறாமல் சொல்லுவாரு” என்றான் பொன்னையா. அவர்கள் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்த போது அர்ச்சகர் முருகனுக்குக் கற்பூரம் காட்டிக் கொண்டிருந்தார். ..”

எல்லாருக்கும் திருநீறு கொடுத்தபின் உள்ளே அதிக மாக இருந்த மாலைகளில் நாலைந்தை எடுத்து வந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாலை போட்டு வாழ்த் தினார் அந்த அர்ச்சகர். அவர்கள் மாலைகளைக் கழற்றும் போது தற்செயலாக அருகருகே நின்று கொண்டிருந்த பாண்டியனையும், கண்ணுக்கினியாளையும் மட்டும், “தம்பீ! நீங்க ரெண்டுபேரும் மட்டும் கொஞ்சம் அப்பிடியே நில்லுங்க. மாலையைக் கழட்டாதீங்க. உங்களைக் கண் குளிரப் பார்க்கணும் போல் இருக்கு உங்க கல்யாணம் பாலவநத்தத்திலே நடக்குமோ, மதுரையிலே நடக்குமோ தெரியாது. அப்ப இந்த ஏழைத் தொண்டன் அங்கெல்லாம் வரமுடியாட்டியும் இப்பவே கண் நெறையப் பார்த்துக்