பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 சத்திய வெள்ளம்

கிடுதேன்” என்று அண்ணாச்சி பிரியமாகச் சிரித்தபடி அவர்களை வேண்டிக் கொண்டார்.

“காமிரா இருந்தால் இப்படியே ஒரு போட் டோக்கூட எடுத்துவிடலாம்” என்றார் மணவாளன்.

“போங்க அண்ணாச்சி! எங்க ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்த்துப்பிட்டால் உங்களுக்கு எப்பப் பார்த் தாலும் இதே கேலிதான்” என்று முகம் சிவக்க வெட்கப் பட்டுக் கொண்டே இங்கிதமான குரலில் அவரைக் கடிந்து கொண்டாள் கண்ணுக்கினியாள்.

“நான் கேலி செய்யாம வேற யாரும்மா செய்வாங்க? என் கடையிலேதான் இந்த யாவாரமே ஆரம்பமாச்சு?” “அண்ணாச்சி சொல்றதை நான் மறுக்கலே...” என்று சொல்லிக் கொண்டே அவளை ஒரக் கண்ணால் பார்த்த படி மாலையைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டான், பாண்டியன். அவளும் தன் மாலையைக் கழற்றிக் கொண்டாள். -

“ஒண்ணும் கவலைப்படாதீங்க!. முருகன் காப் பாத்துவான்!. முருகனும் வள்ளியும் மாதிரி இருக்கப் போlங்க...” என்று கண்களில் குறும்பு மின்ன அவர்களை வாழ்த்தினார் அண்ணாச்சி,

“உனக்குக் கிடைத்த யோகம் மணவாளனுக்குக் கூடக் கிடைக்கலே, தம்பீ! அவரு இங்கே படிச்சப்ப இப்படி ஒரு பொருத்தமான ஜோடி அகப்படலே. பாவம்! இங்கே அவரு காதலிச்சதெல்லாம் மாணவர் இயக்கத்தை மட்டும்தான் தம்பீ! என்னைப் போல் அவரும் ஒரு அப்பாவி,”

“உங்க ரெண்டு பேரையும் போல அப்பாவிகள் இந்த நாட்டுக்கு இன்றைய நிலையில் இன்னும் எவ்வளவோ பேர் தேவை! எங்களைப் போன்றவர்கள் வீதிக்கு வீதி கல்லூரிக்குக் கல்லூரி வகுப்புக்கு வகுப்பு யாராவது இருப்பார்கள். ஆனால் உங்க ரெண்டு பேரையும் போல் ஊருக்கு ஒருத்தராவது வேணும் அண்ணாச்சீ!...”

“தம்பீ! ஏதேது?. ஒரேயடியாய்ப் புகழ்ந்து தள்ளிடாதே. நான் ஒர் அசடன். புகழ்கிறவங்களுக்கு