பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 சத்திய வெள்ளம்

சொல்லி வைத்தாற்போல் எல்லோரிடமிருந்தும் அவருக் குக் கிடைத்தது. சில போலீஸ்காரர்கள் வாளிவாளியாகத் தண்ணிரும் துடைப்பமும் கொண்டு வந்து சுவர்களிலும், தரையிலும் மந்திரியைப் பற்றி எழுதியிருந்தவற்றை அழிக்க முயன்று பார்த்தார்கள். சிறிது நேரம் முயன்றபின் ஒரு வாரம் அழித்தாலும் அழித்து முடிக்க இயலாத அத்தனை இடங்களில் அவை எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அந்த முயற்சியையும் அவர்கள் கைவிட வேண்டியதாயிற்று மாணவர்கள் பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சரியாக ஒன்பது மணிக்கு ஒரு ஜீப்பில் துணை வேந்தர், ஆனந்தவேலு, இராவணசாமி, ஒரு போலீஸ் அதிகாரி ஆகிய நால்வரும் வந்து பட்டமளிப்பு விழா மண்டப முகப்பை அடையும் சாலையிலே நிறுத்திக் கொண்டு மாணவர்களைக் கலைந்து போகுமாறு வேண்டினர். துணை வேந்தர் மெகபோனை'க் கையில்வைத்துக் கொண்டு, “விரும்புகிறவர்கள் பட்டமளிப்பு விழா மண்டபத்துக்குள் போய் அமருங்கள். விரும்பாதவர்கள் ஹாஸ்டல் அறை களிலேயே போய் அமைதியாக இருக்கலாம்! இது சந்தைக் கடை அல்ல. பல்கலைக் கழகம் என்பது ஞாபகம் இருக் கட்டும்” என்று கூப்பாடு போட்டவுடன், “இப்படி நீங்கள் கூறும் உவமை எங்களைவிட உங்களுக்குத்தான் நன்றாக ஞாபகம் இருக்க வேண்டும். நீங்கள்தான் இந்தப் பல்கலைக் கழகத்தைச் சந்தைக் கடை ஆக்கியிருக்கிறீர்கள். முதலில் காம்பஸில் குவித்திருக்கும் போலீஸை வெளி யேற்றிவிட்டு அப்புறம் பேச வாருங்கள்” என்று மாணவர் கள் பதிலுக்குத் துணைவேந்தரை நோக்கிக் கூப்பாடு போட்டார்கள்.

“நீங்கள் இப்படி முரண்டு பிடித்தால் விளைவுகள் பயங்கரமாகிவிடும்” என்று இராவணசாமி மெகபோனை வாங்கிப் பேச முற்பட்டபோது நாலைந்து அழுகின தக்காளி களும், முட்டைகளும் ஜீப்பை நோக்கிப் பறந்ததோடு, “பேசாதே! இது உன் கட்சி அலுவலகமில்லை! பல்கலைக் கழகம். இங்கே வந்து பேச நீ யார்?” என்று கத்தினார்கள் மாணவர்கள். அதைப் பார்த்துத் தாமும் மெகபோனில்