பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 485

ஏதாவது பேச எண்ணியிருந்த ஆனந்தவேலு பயந்து சும்மா இருந்து விட்டார். ஜீப் உடனே திரும்பிவிட்டது.

அந்த ஜீப் திரும்பிய பத்து நிமிஷங்களுக்கெல்லாம் நேர் எதிரே இருந்த போஸ்ட் கிராஜுவேட் ஹாஸ்டல் புது பிளாக் மாடியிலிருந்து மாணவர்களை நோக்கிச் சோடா புட்டிகளும், கற்களும் பறந்து வந்தன. சிலருக்கு அடி பட்டது. சிலருக்கு மண்டை உடைந்தது. மணவாளன் போலீஸாரிடம் போய், “அந்த மாடியில் யாரோ கட்சி ஆட்கள் ஒளிந்திருந்து மாணவர்கள் மேல் சோடா பாட்டில்களையும், கற்களையும் எறிகிறார்கள். நீங்கள் உடனே போய் அவர்களைத் தடுக்காவிட்டால் மாணவர் கள் அங்கே பதிலுக்கு ஒடிப்போய்த் தாக்குவதை நான் கட்டுப் படுத்த முடியாமற் போய்விடும். தயவுசெய்து...” என்று கெஞ்சினார்.

“நோ நோ. ஹெள இஸ் இட் பாஸிபிள். அந்தப் பிளாக்கில் கான்வகேஷனுக்கு வந்திருக்கிற வி.ஐ.பி.ஸ்லாம் ‘கெஸ்டா தங்கியிருக்காங்க. அங்கே நாங்க போக முடியாது” என்று போலீஸ் அதிகாரி மறுத்துவிட்டார். மணவாளனால் மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாத அளவு பலர் சோடா பாட்டில் வீச்சிலும், கல்விச்சிலும் காயமடைந்து விழவே, லெனின் தங்கத்துரை ஒரு நானூறு ஐந்நூறு மாணவர்களோடு அங்கே விரைய முற்பட்டார். உடனே போலீஸார் ஓடிவந்து அந்த ஹாஸ்டல் பிளாக்கில்’ மாணவர்கள் நுழைய முடியாதபடி வியூகம் வகுத்துத் தடுத்துக் கொண்டு நின்றனர். மாணவர்களுக்கு ஆத்திரம் மூண்டது. கல்லையும் சோடா பாட்டில்களையும் எறிபவர் களைத் தாங்களே பிடிக்கவும் முயலாமல் மாணவர்களே தற்காப்புக்காக அவர்களை எதிர்த்துப் போரிட்டுப் பிடிக்கவும் விடாமல் போலீஸார் ரவுடிகளைப் பாதுகாக் கிறார்களோ என்று தோன்றியதும் மாணவர்களுக்கும் போலீசாருக்குமே போர் மூண்டது. எச்சரிக்கைகூட இல்லாமல் உடனே லத்தி சார்ஜுக்கு ஆர்டர் கொடுத்தார் ஒரு போலீஸ் அதிகாரி, முழங்காலுக்குக் கீழே அடிக்க வேண்டும் என்ற வரையறைகூட இல்லாமல் காட்டு