பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 சத்திய வெள்ளம்

மிராண்டித் தனமாக மூக்கு முகம் பாராமல் அடிகள் விழவே மாணவர்கள் பொறுமை இழந்தனர். போலீஸா ரோடு ஹாஸ்டல் புதுக் கட்டிடத்தில் வரவழைத்து வைக்கப்பட்டிருந்த கட்சி முரடர்களும் சேர்ந்து கொள்ளவே மாணவர்கள் விடுதி அறைகளை நோக்கி ஓடினர். போலீஸாரும் விடவில்லை. கட்சி முரடர்களும் விட வில்லை. விடுதி அறைகளிலும் நுழைந்து மாணவர்களைத் துரத்தித் துரத்தித் தாக்கத் தொடங்கினார்கள். சில அறைகளில் புகுந்த கட்சி முரடர்கள் மாணவர்களின் கடிகாரங்கள், ரேடியோக்கள், விலை உயர்ந்த உடைகள் துணிமணிகளைக்கூடச் சூறையாட ஆரம்பிக்கவே மாணவர்களும் பதிலுக்குத் தாக்கவேண்டியதாயிற்று. மாணவிகளைப் பத்திரமாகப் பட்டமளிப்பு விழா மண்டபத்தருகே சேர்த்து இருக்கச் செய்து அவர்களுக்குக் காவலாக இருநூறு, முந்நூறு மாணவர்களையும் அமர்த்தி விட்டு மணவாளன், பாண்டியன் முதலியவர்கள் துணை வேந்தர் அறையை நோக்கி விரைந்தார்கள். அங்கே துணை வேந்தர், ஆர்டிஓ, இராவணசாமி, ஆனந்தவேலு எல்லாரும் உட்கார்ந்து எந்தக் கவலையும் இல்லாதவர்கள் போல் பேசிக் கொண்டிருந்தார்கள். சோடாபாட்டில் வீச்சில் மண்டை உடைந்த ஒரு மாணவனைக் கூப்பிட்டுக் காட்டி, “நாங்கள் அமைதியாகத்தான் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பினோம்! ஆனால் நீங்கள் போலீஸையும், கட்சி ஆட்களையும் விட்டு எங்களைக் கொடுமைப் படுத்துகிறீர்கள். எங்கள் மாணவத்தோழர்கள் இரத்தம் சிந்துவதை நாங்கள் இனியும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. போலீஸையும், கட்சிக் குண்டர்களையும் உடனே இங்கிருந்து வெளியே அனுப்பு கிறீர்களா, இல்லையா?” என்று பாண்டியனும், மண வாளனும் கேட்டதற்குத் தான் உடனே பதில் சொல்லாமல் அருகருகே அமர்ந்திருந்த ஆர்.டி.ஓ.வையும், ஆனந்த வேலுவையும் மாறி மாறிப் பார்த்தார் துணைவேந்தர்.

“இந்த யூனிவர்ஸிடிக்கு நீங்கதானே சார் துணை வேந்தராயிருக்கீங்க? அவங்களை ஏன் பார்க்கிறீங்க? பதில் சொல்lங்களா? அல்லது டாக்டர் பட்டத்துக்குக் காத்தி