பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 47

போதுகூட அவர் சொல்லவில்லையே? சற்று நேரத்துக்கு முன் நானும் தோழிகளும் மெஸ்ஸுக்குச் சாப்பிடப் போனபோதுதான் அங்கே இதைக் கேள்விப்பட்டேன். நீங்கள் பேரவைச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடு வதிலிருந்து விலகிக் கொண்டு விட்டீர்களாமே. ஏன் அப்படிச் செய்தீர்கள்?”

“நான்சென்ஸ். யார் சொன்னார்கள் அப்படி? யாரோ புரளி கிளப்பி ஏமாற்றுகிறார்கள். இந்தத் தேர்தல் நடந்து மூடிகிறவரை இப்படி இன்னும் எத்தனையோ புரளிகளைக் கிளப்பிவிடுவார்கள். விழிப்பாயிருந்து எது பொய், எது நிஜம் என்று கண்டுகொள்கிற திராணி இல்லாவிட்டால் நமக்குள்ளேயே ஒற்றுமைக் குலைவு ஏற்பட்டுவிடும்.”

“இப்போது அப்படித்தான் ஆகிவிட்டது. மெஸ்ஸில் எவளோ ஒருத்தி இப்படிப் புரளி பண்ணியதும் நான் உங் களுக்காக ஒட்டுக்குச் சொல்லி வைத்திருந்த என் தோழிகள் ஒவ்வொருவராக என்னிடம் வந்து இப்படி உடனே ‘வித்ட்ரா பண்ணிட்டு ஒடுற ஆளுக்கா ஒட்டுக் கேட்டே ‘ன்னு என்னோடு சண்டைக்கே வந்து விட்டார்கள்.” -

“அன்பரசனும், வெற்றிச் செல்வனும் தோல்விக்குப் பயந்து ஊரைவிட்டே ஓடிப்போய்விட்டாங்கன்னு நீங்க பதிலுக்கு ஒரு புரளியைக் கிளப்பினால் எல்லாம் சரியாகி விடும்.” -

“தொடர்ந்து இதே மாதிரி வம்பு பண்ணிக் கொண்டி ருந்தார்கள் என்றால் அதையும் செய்துவிட வேண்டியது தான். எதற்கும் தேர்தல் முடிகிறவரையில் நீங்களும் விழிப் பாயிருப்பது நல்லது. இருட்டில் தனியே எங்கும் போகாதீர் கள். விடுதி அறைக் கதவை உள்ளே தாழிடாமல் திறந்து போடாதீர்கள். அன்பரசன் ஆட்கள் வெறிபிடித்துப் போய் அலைகிறார்கள்.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/49&oldid=608896" இலிருந்து மீள்விக்கப்பட்டது