பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 489

பதிவாகவில்லையானால் நாளைக்குக் கேஸ், நீதி விசாரணை என்று வரும்போது தங்கள் பக்கம் பல மில்லாமல் போகும் என்பதை அவர்கள் அறிந்திருந்த காரணத்தால் உடன் அதைக் கவனிக்க வேண்டியிருந்தது. யூனிவர்ஸிடி மெடிகல் ஆபீஸர், ‘பிரசாத் எப்போதுமே இப்படித்தான். துணைவேந்தருக்கு அடுத்தபடி அங்கே கெட்ட பெயர் எடுத்திருந்தார் அவர்.

பல சமயங்களில் மாணவர்கள் சிறிது தொலைவு தள்ளி இருந்த மருத்துவக் கல்லூரியோடு சேர்ந்த ஆஸ்பத் திரியை நம்பிப் போவார்களே ஒழியப் பிரசாரத்தை நம்பி இங்கே போகவே மாட்டார்கள். இன்று அவசரத்தில் இங்கே தான் போயாக வேண்டியிருந்தது. பிரசாத் ஒரு முசுடுபிடித்த மனிதர்.

டாக்டர் பிரசாத்திடம் விவாதம் செய்து அவரை எச்சரித்து அதன்பின் அடிபட்ட மாணவர்களைக் கவனித்து ஆறுதல் கூறிவிட்டு மணவாளனும், மோகன்தாஸாம் திரும்பியபோது பகல் பன்னிரண்டு மணி. அதுவரையில் பட்டமளிப்பு விழாவே தொடங்கவில்லை. பட்டமளிப்பு விழா உடையோடும், சாதாரண உடையிலுமாகச் சரிபாதி மாணவர்கள் மைதானத்தில் இருந்தார்கள். மற்றவர்கள் ‘புது பிளாக் ஹாஸ்டல் அறைகளில் வந்து தங்கி மாணவர்களைத் தாக்க முயன்ற கட்சி முரடர்களைத் துரத்திக் கொண்டிருந்தார்கள்.

‘கவர்னரின் ஆலோசனைப்படி விழாவுக்கு வந்திருந்த சிண்டிகேட் உறுப்பினர்களைக் கூட்டி அவசர முடி வெடுத்து அந்தப் பட்டமளிப்பு விழாவையே இரத்துச் செய்துவிட்டதாகவும் அந்தந்த மாணவர்களுக்குப் பதிவுத் தபால் மூலம் பட்டங்கள் அனுப்பப்படும் என்றும் பகல் ஒரு மணிக்கு மெகபோனில் அறிவிக்கப்பட்டபோது மாணவர்கள் ஒரு தீமையைத் தடுத்துவிட்ட திருப்தியோடு கலைந்தனர். கவர்னரைச் சந்தித்து மணவாளன் நன்றி தெரிவிக்கப் போனார். கவர்னர் மறுக்காமல் மண வாளனை அறைக்கு வரச்சொல்லிச் சந்தித்தார்.

“உங்கள் கையால் பட்டம் பெறுவதையோ உங்கள் உரையைக் கேட்பதிலோ நான் மகிழ்வேன். என் சகாக்