பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 491

உங்களைத் தாக்கக்கூடும். ஜாக்கிரதையாக இருங்கள். என்று எச்சரித்தார்.

“யுவசக்தியை வெள்ளமாகப் பெருக்கி நினைத்ததைச் சாதித்துவிட்டீர்கள்! அமைச்சர் கரியமாணிக்கம், இராவண சாமி, ஆனந்தவேலு, வி.சி. எல்லாத் தீயவர்கள் முகத்திலும் கரியைப் பூசிவிட்டீர்கள். இதற்கெல்லாம் காரணமான உங்களைப் போன்ற நாலைந்து பேரை எப்படியும் பழி வாங்கத் துடிதுடித்துக் கொண்டிருப்பார்கள்” என்று அந்த நிருபரே மேலும் கூறிவிட்டுப் போனார்.

பஸ்களிலும், லாரிகளிலும் வந்திருந்த வெளியூர் மாணவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு ஹாஸ்டலில் இருந்த மாணவர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லிவிட்டு ஆறு ஆறரை மணி சுமாருக்கு மண வாளன், பாண்டியன், கண்ணுக்கினியாள், லெனின் தங்கத் துரை, மோகன்தாஸ் ஆகிய ஐந்து பேர்களும் அண்ணாச் சிக் கடைக்குப் போனார்கள். அண்ணாச்சி உடனே எல்லாருக்கும் காப்பி சிற்றுண்டி வரவழைத்துக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.

“கடவுள் புண்ணியத்திலே யாருக்கும் உயிர்ச் சேதமில்லே. மாணவர்களைத்தான் கண் மூக்குத் தெரியாமல் அடிச்சுத் தள்ளியிருக்காங்க. அதைவிடக் கொடுமை ஆஸ்பத்திரியிலே டாக்டர் பிரசாத் - சரியாகக் கவனிக்காம ஏமாத்தறான். போய்ப் பார்த்தப்ப எனக்கே கண்ணிலே தண்ணி வந்திடிச்சு...” என்று வருத்தப்பட்டார் அண்ணாச்சி. அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டு முடித்துக் காப்பி அருந்திக் கொண்டிருக்கும்போது மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கக் கத்திக் கொண்டே ஹாஸ்டலிலிருந்து பொன்னையா ஒடி வந்தான்.

“அண்ணே! ஆபத்து. யூனிவர்ஸிடியிலே போலீஸும் கட்சி ஆட்களும் புகுந்து மாணவர்களை உதைக்கறாங்க. மெயினை ஆஃப் பண்ணிக் காம்பஸ் பூரா லைட் இல்லாமச் செஞ்சிட்டாங்க... இருட்டிலே ஒண்னுமே தெரியலே. போலீஸ் லாரி லாரியாப் பையன்களை ஏத்திக் கிட்டுப் போறாங்க. ரூம் கதவை உடைச்சுப் பாண்டியன்