பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 493

அகப்பட்ட மாணவர்களை எல்லாம் போலீஸ் வேற அடிச்சு உதைச்சு லாரியிலே ஏத்திக்கிட்டிருக்காங்க...! யாரிட்டவாவது புகார் செய்யலாம்னா வி.சி.யை வீட்டிலேயும் காணலே. ஆபீஸிலேயும் காணலே. சீஃப் வார்டனை ஆளையே காணோம்” என்று போகும்போது மேலும் நண்பர்களிடம் விவரித்தான் பொன்னையா.

அவர்கள் நால்வரும் நேரே பல்கலைக் கழகத்துக்குப் போகவில்லை. ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குப் போனார்கள். ஆர்.டி.ஓ. அங்கே இல்லை. வீட்டில் இருப்பதாகச் சொன் னார்கள். வீட்டுக்குப் போனார்கள். ஆர்.டி.ஒ. இருந்தார். “பிராப்பர்ட்டிக்குச் சேதம் வருமோ, நெருப்புக் கிருப்பு வைச்சிடுவாங்களோன்னு மாணவர்களை நினைச்சுப் பயந்து யூனிவர்ஸிடி காம்பளை உடனே காலிபண்ணி மாணவர்களை வெளியேற்றும்படி மேலிடத்திலிருந்து ஆர்டர்ஸ் வந்திருக்கு. அதனாலே எங்க டுட்டியை நாங்க செய்றோம்..” என்றார் அவர்,

“அரிவாள், கடப்பாரை, கம்புகளோட இராவணசாமி அனுப்பின முரடங்க புகுந்து பையன்களை மிரட்டிக் கிட்டிருக்காங்க சார் ! நீங்களா அதை அடக்குங்க. இல்லாட்டி நாங்களாவது அடக்கணும்” என்று லெனின் தங்கத்துரை இரைந்தபோது,

“அப்படி எங்களுக்குத் தகவல் எதுவுமே இல்லியே!” என்றார் ஆர்.டி.ஒ.

“இதோ சட்டை கிழிஞ்சு கைகால்களிலே இரத்தக் காயத்தோடு வந்திருக்கிற இந்தப் பையனைப் பார்த்தாவது அந்தத் தகவலை தெரிஞ்சுக்குங்க..” என்று உடனிருந்த பொன்னையாவை இழுத்து அவர் முன் நிறுத்தினார் { {❍ ☾ᏈTöffTöYITöᏈᎢ .

“நான் கவனிக்கறேன். நீங்க சொல்றதை அப்படியே நம்பிட முடியுமா?” என்று அவர்களைப் போகச் சொல் லாத குறையாக எழுந்து கைகூப்பிக் கொண்டே உள்ளே போய்விட்டார் ஆர்.டி.ஒ. நியாயவுணர்ச்சியற்றவர்கள் கையில் அதிகாரம் இருப்பது என்பது மக்களுக்கு வழிப்