பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சத்திய வெள்ளம்

“நன்றி, நீங்கள் கவலைப்படுகிறீர்களே என்பதற்காக வாவது நான் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்றப்படி என்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது.”

‘இதுதான் அசட்டுத் தைரியம் என்பது.” “தைரியத்தில் அப்படி ஒரு வகையே கிடையாது. அதைரியத்தை வேண்டுமானால் மிகவும் நாகரிகமாக இந்தப் பெயரால் இப்படி அழைத்துக் கொள்ளலாம்.”

“உங்களை எ ச் சரிப்பதற்கு என க்கு உரிமை இல்லையா?”

“தாராளமாக உண்டு.! உனக்கு மட்டும்தான் உண்டு.” “எங்கே? இன்னொருமுறை உங்கள் வாயால் உனக்கு என்று சொல்லுங்கள். கேட்க ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.”

“உன் குரலை டெலிபோனில் கேட்டபின் உனக்குச் செவிக்கினியாள், மனதுக்கினியாள் என்றெல்லாம் கூடப் பெயர் வைத்திருக்கலாம்போல் தோன்றுகிறது.”

“என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டுங்கள். நீங்கள் சூட்டுகிற பெயர்களெல்லாம் எனக்குப் பிடித் தவைகளாகத்தான் இருக்கும்! ஒரு பொருளாதார மாணவ ராகிய நீங்கள் என்னால் அனாவசியமாகக் கவிஞராகி விடுவீர்கள் போலிருக்கிறது.”

“நீயே ஒரு கவிதையாக இருக்கும் போது உனக்காக நான் வேறு கவிஞனாக வேண்டிய அவசியம் இல்லை. சிலபேர் கவிதைக்குப் பொருளாகிறார்கள். வேறு சிலர் கவிதையாகவே இருக்கிறார்கள். நீ இரண்டாவது வகையைச் சேர்ந்தவள்.”

“இது டெலிபோன்! ஒரு முழுப் பாராட்டுச் சொற் பொழிவையே டெலிபோனில் செய்து முடித்துவிட வசதி யில்லை. இங்கே வெளியே சிலர் பேசுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.”

“அப்படியானால் மீதியை அப்புறம் நேரில் பேசு வோம். ஒருவேளை யுனிவர்சிட்டி நிர்வாகமே தேர்தலைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/50&oldid=608872" இலிருந்து மீள்விக்கப்பட்டது