பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 சத்திய வெள்ளம்

நாயை அடிக்கிற மாதிரி அடிக்கனும் என்று ஒரு முரட்டுக் குரல் வெளிப்புறம் கத்துவது உள்ளே நன்றாகக் கேட்டது. சில வசைச் சொற்கள் காது கொடுத்துக் கேட்க முடியா தவையாக இருந்தன.

முதல்லே இந்தச் சைக்கிள் கடைக்காரனை உதைக் கணும்! இவன்தான் எல்லாத்துக்கும் காரணம் என்றொரு வெறிப்பேச்சும் காதில் விழுந்தது. அதையடுத்துக் கடை யின் மரக் கதவு உடைபடும் ஒசை கேட்கத் தொடங்கியது. அண்ணாச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இட்லிப் பொட்டலத்தை மீதத்தோடு அப்படியே ஒரு மூலையில் வைத்தார். உறுதியான குரலில் பாண்டியனை வேண்டினார்: “தம்பீ! எது நடந்தாலும் நீயும் தங்கச்சியும் இந்த இடத்தைவிட்டு வெளியே வரப்பிடாது. மத்ததை நான் பார்த்துகிறேன்” என்று கூறிவிட்டு இன்னொரு காரியமும் செய்தார்.

“வாங்க ரெண்டு பேரும். இப்படிச் சேர்ந்து உட்காருங்க” என்று அவங்களை உட்கார வைத்து ஒரு மிகப் பெரிய தொரு காலி சாதிக்காய்ப் பெட்டியை எடுத்து அவர்கள் நன்றாக மறையும்படி மூடிக் கவிழ்த்தார். ஒருவர் மூச்சுக் காற்று இன்னொருவர் முகத்தில் உராயும்படி நெருக்கமாக அந்தப் பெட்டியின் உள்ளே கண்ணுக்கினியாளும் பாண்டியனும் அமர்ந்திருந்தனர்.

அண்ணாச்சி சற்று முன் அவளுக்குக் கொடுத்திருந்த கப்பலூர் மல்லிகைப்பூவின் வாசனை உள்ளே கமகமத்தது. ஆனால் அந்த வாசனையை உணரும் மனநிலையில் அவர்கள் அப்போது இல்லை. பெட்டியிலிருந்த இடுக்கு வழியே பார்த்தபோது மெழுகு வர்த்தியைக் கையில் எடுத்துக் கொண்டு அண்ணாச்சி கடை முகப்புக்குப் போவது தெரிந்தது.

“அண்ணாச்சி! வெறுங்கையோடு போகாதீர்கள். ஒரு சிலம்பக் கழியையும் எடுத்துக்கிட்டுப் போங்க” என்று பண்டியன் உள்ளேயிருந்து போட்ட கூப்பாடு அவருக்குக் கேட்கவில்லை.