பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 499

இருளிலும் பயத்திலும் பெட்டிக்குள் கண்ணுக்கினி யாள் அவனை ஒட்டினாற்போல் தழுவி உட்கார்ந்திருந் தாள். “பாவம்! நம்மாலே அண்ணாச்சிக்கு ரொம்பச் சிரமம். அவர் சங்கடப்படுகிறார்” என்று அவன் காதருகே கூறினாள் அவள்.

“நமக்குத்தான் வேதனையாயிருக்கிறது. அவருடைய சுபாவப்படி பிறருக்கு உதவுவதை ஒருபோதும் அவர் சங்கடமாக நினைப்பதில்லை” என்றான் பாண்டியன்.

“ரொம்பப் பாவமாயிருக்கு ! பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே எழுந்திருந்து போயிட்டாரு!” என்று கண்ணுக்கினியாள் துயரம் தோய்ந்த குரலில் அவன் காதருகே கூறினாள்.

சாதிக்காய்ப் பெட்டியிலிருந்த சிறு துளை வழியே இருளாயிருந்ததனால் அப்போது வெளியே நடப்பதைப் பார்க்கவும் முடியவில்லை. ஒரே கூச்சலும், குழப்பமும், பொருள்கள் உடைபடும் ஒசைகளுமாகக் கிணற்றுக் குள்ளிருந்து கேட்க முடிந்தது போல் கேட்டன. அங்கே முகப்பிலிருந்த மகாத்மா காந்தி படத்தை யாரோ உடைக்க முயல்வதும், “இந்தப் படம் உனக்கென்ன பாவம் செய்தது? இதை நீ உடைக்க விட மாட்டேன்!. என் பிணத்து மேலே ஏறித்தான் இதை நீ உடைக்க முடியும்” என்று அண்ணாச்சி இரைவதும் மெல்லிய குரல்களாக மழுங்கிக் கேட்டன.

அப்போது பொறுமை இழந்த பாண்டியன் “நானும் போகிறேன். இந்த நிலையில் அவரைத் தனியே விட்டு விட்டு நான் இங்கே ஒளிந்திருப்பது கோழைத்தனம். என்னை விடு. நான் போக வேண்டும்” என்று அவள் பிடியிலிருந்து திமிறினான். -

“கூடாது! கூடவே கூடாது. நீங்கள்போவது அவருக்கு மேலும் இடைஞ்சலாக முடியும். உங்களைப் பார்த்து விட்டால் வந்திருக்கிற குண்டர்களின் கோபம் இன்னும் அதிகமாகும். பாண்டியன் இங்கே இல்லை என்று சத்திய சந்தரான அண்ணாச்சியே உங்களுக்காக உங்களைக் காப்பாற்ற ஒரு பொய் சொல்லியிருக்கிறார். இந்த நிலை