பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 சத்திய வெள்ளம்

யில் நீங்கள் அங்கே போய் நிற்பது, அவரையே அவமானப் படுத்துவதற்குச் சமமானது” என்று கூறி அவனைப் போகவிடாமல் இறுகத் தழுவிக் கொண்டாள் கண்ணுக் கினியாள். அவளை மீற முடியாமல் அப்போது அவன் கட்டுப்பட்டான்.

வெளியே வெறிக் கூச்சல்களும், உடைபடும் ஒசை களும், வசை மொழிகளும் விநாடிக்கு விநாடி அதிகமாகிக் கொண்டிருந்தன. உள்ளே இருக்கிற சிலம்பக் கழிகளில் ஒன்றை உருவிக் கொண்டு கதவைத் திறந்து வெளியேறி எதிரிகளைச் சூறையாட விரும்பிய பாண்டியனின் கைகளைச் செயற்பட முடியாமல் கண்ணுக்கினியாள் கட்டிப் போட்டிருந்தாள்.

ஒரு நிலைமைக்கு மேல் பொறுமை இழந்த பாண்டியன், “போர்க் களங்களில் வீரர்களின் அருகே அவர்கள் மேல் பேரன்பு கொண்ட பெண்கள் இருக்கக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லியதன் உண்மை அர்த்தம் இப்போதுதான் எனக்குப் புரிகிறது” என்று அவளிடம் எரிச்சலோடு சொன்னான். இங்கே அவன் இப்படிக் கூறிய சில விநாடி களில் உட் கதவையும் உடைத்துக் கொண்டு குண்டர்கள் புகுந்துவிட்டார்கள். அவர்கள் மறைந்திருந்த சாதிக்காய்ப் பெட்டியைச் சுற்றிலும் நடக்கும் காலடி ஓசைகளும், குரல்களும் கேட்டன. -

சாதிக்காய்ப் பெட்டியின் மேல் கடப்பாறையினால் ஓங்கி ஒர் அடி விழுந்தது. நல்ல வேளையாக அதை வந்தவர் கள் தூக்கிப் பார்க்கவில்லை. யார் செய்த புண்ணியமோ அவர்கள் பிழைத்தார்கள். காலடி ஓசைகள் திரும்பின. உட்புறமிருந்து அவர்கள் போய்விட்டார்கள்.

சில விநாடிகளுக்குப் பின் கடை முகப்பிலிருந்து, “முருகா! கடவுளே!” என்று அண்ணாச்சியின் குரல் பரிதாபமாக அலறி ஒலித்தது. அதையடுத்து ஆட்கள் கலைந்து ஒடுவதும் கூச்சலும் குழப்பமுமாகச் சிறிது நேரம் கழிந்தது. அண்ணாச்சியின் குரல் மறுபடியும் கேட்கவில்லை. அவரை அவர்கள் தங்களோடு இழுத்துக் கொண்டு போயிருப்பார்களோ என்று தோன்றியது பாண்டியனுக்கு.