பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 501

“எனக்குப் பயமாயிருக்கு! முருகா கடவுளே என்று அண்ணாச்சி கதறியபோது என் ரத்தமே உறைஞ்சு போச்சு” என்றாள் கண்ணுக்கினியாள். -

“அண்ணாச்சி வெளியே போறபோது கையிலே ஒரு சிலம்பக் கம்புகூட எடுத்துக்கிட்டுப் போகலே. கம்பெல் லாம் இங்கே நம்ம சாதிக்காய்ப் பெட்டி ஒரமாத்தான் அடுக்கியிருக்கு. மறுபடியும் வந்து எடுத்தா நம்மைக் காட்டிக் கொடுத்த மாதிரி ஆகுமோன்னு நினைச்சோ என்னமோ அவர் அப்புறம்கூட வந்து இங்கேயிருந்து கம்பை எடுத்ததாகத் தெரியலே. கம்பு கையிலே இருந்தா எத்தினி நூறு பேரானாலும் அவர் பக்கத்திலே நெருங்க முடியாது. இப்ப என்ன ஆச்சுங்கிறதே தெரியலே. ‘முருகான்னு கத்தினப் புறம் அவர் குரலே கேட்கலைங் கிறது ஏன்னும் தெரியலே. என்ன ஆனாலும் ஆகட்டும்; போய்ப் பார்ப்போம்” என்று சாதிக்காய்ப் பெட்டியைத் தூக்கிக் தள்ளி விட்டு அவள் பின்தொடர இருளில் வெளியே விரைந்தான் பாண்டியன்.

வெளியே ஆளரவமே இல்லை. கடைக் கதவுகள் உடைக்கப்பட்டுச் சூறையாடப்பட்டுப் பண்டங்களும் பாட்டில்களும் தெருவில் சிதறிக் கிடந்தன. கடைக்குள்ளும் வெளியேயும் ஒரே இருளாயிருந்தது.

பாண்டியன் மறுபடியும் தட்டுத் தடுமாறி உள்ளே ஒடி அண்ணாச்சியின் படுக்கையான கயிற்றுக் கட்டில் அங்கே எப்போதும் ஒரு டார்ச் இருப்பதை நினைவு கூர்ந்து அதைத் தேடித் துழாவி எடுத்து வந்தான்.

கடை முகப்பில் இருந்த காந்தி படத்தைக் காண வில்லை. மற்றப் படங்களில் சில உடைந்திருந்தன. கீழே அங்கங்கே குருதி சிந்தியிருந்தது. கடையில் ஒரு பொருள் விடாமல் சர்வ நாசமாக்கப்பட்டிருந்தது. அண்ணாச்சியை எங்குமே காணவில்லை. உட்புறமும், முகப்பிலும் டார்ச் ஒளியில் நன்றாகத் தேடிய பின் தெருவுக்கு வந்தார்கள்

அவர்கரெ. - - ... --