பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 சத்திய வெள்ளம்

பத்துக் கெட்டவர்களை மட்டும் இந்தப் போலீஸால் கண்டுபிடிக்க முடியாமற் போய்விடும்” என்று கண்ணுக் கினியாளின் காதருகே கோபமாகச் சொன்னான் பாண்டியன்.

ஆம்புலன்ஸில் பிரேதத்தைப் பரிசோதனைக்குக் கொண்டு போய்விட்டு வந்தார்கள்.

பின்னிரவு இரண்டு மணிக்கு மேல் மணவாளனும் மோகன்தாஸும் லெனின் தங்கத்துரையும் மற்ற மாணவர் களும் எங்கிருந்தோ கூட்டமாகத் திரும்பி வந்தார்கள்.

மணவாளனால் அங்கே கால்தரித்து நிற்கவும் முடியா மல் அவர் உடம்பு நடுங்கியது. பேயறைந்ததுபோல் நின்றார் அவர். மாணவர்களில் பலர் கண்கலங்கி நின்றார்கள். நேரம் ஆக ஆகச் செய்தி தெரிந்து மாணவர்களும் தொழிலாளர்களும், நகரப் பொதுமக்களும் வரத் தொடங்கினார்கள். -

கடை வாசலில் ஒரு மேடைபோட்டு அண்ணாச்சி உபயோகித்த கயிற்றுக் கட்டிலில் அவர் சடலத்தைக் கிடத்தினார்கள். எந்த நிலையில் காந்தி படத்தை அனைத்தவாறே அவர் இறந்தாரோ, அந்த நிலையிலேயே கட்டிலில் அவரைப் படுக்க வைத்திருந்தார்கள்.

நடுங்கும் கைகளால் ஒரு மூவர்ணக் கதர் நூல் மாலையை முதலில் அவர் கழுத்தில் சூட்டினார் மணவாளன்.

அடுத்துப் பாண்டியன், கண்ணுக்கினியாள், லெனின் தங்கத்துரை, பொன்னையா, மோகன்தாஸ் ஒவ்வொரு வரும் மாலை சூட்டினார்கள்.

தோட்டத் தொழிலாளர் யூனியன் காரியதரிசி ஒரு பெரிய ரோஜாப்பூ மாலையைச் சூட்டினார்.

பேராசிரியர் பூதலிங்கம் ஒரு சந்தன மாலையை அணிவித்துவிட்டு, “பாண்டியன்! அழாதே! நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்” என்று கூறிவிட்டு நீர் மல்கும் தம்முடைய கண்களைத் துடைத்துக் கொண்டார். - -