பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 சத்திய வெள்ளம்

மக்களும் பின்தொடர்ந்தனர். ஆறு பர்லாங் நீளம் சென்ற அமைதியான ஊர்வலம் மயானத்தை அடையப் பகல் ஒரு மணி ஆயிற்று.

“அண்ணாச்சிக்குப் பிள்ளை குட்டிகள் இல்லை! நாங்கள் தான் அவருடைய சொந்தப் பிள்ளைகள்” என்று மணவாளன், பாண்டியன், லெனின் தங்கத்துரை, மோகன் தாஸ், பொன்னையா ஆகிய ஐவரும் அண்ணாச்சியின் சடலத்துக்குத் தீ மூட்டினார்கள். அப்போது கண்ணுக் கினியாள் மூர்ச்சையாகி விழுந்துவிட்டாள். தண்ணிரை முகத்தில் தெளித்து அவளை நினைவுக்குக் கொண்டு வந்தார்கள். -

சடலத்துக்கு எரியூட்டியதும் அங்கேயே கந்தசாமி நாயுடு தலைமையில் ஒர் அனுதாபக் கூட்டம் நடந்தது. முதலில் மணவாளன் பேசினார்:

“மாணவ நண்பர்களே! இன்றோடு இங்கே ஒரு புனிதமான சகாப்தம் முடிந்து போய்விட்டது. தமது தொண்டின் ஆழமும் தியாகத்தின் பரப்பும் தமக்கே தெரியாமல் வாழ்ந்த ஒர் உத்தமத் தொண்டரை நாம் இழந்துவிட்டோம். இனி இந்த நாட்டின் எல்லாவிதமான அழுக்குகளையும் கரைத்து அரித்துக் கொண்டு போகும் பரிசுத்தமான சத்திய வெள்ளமாக இளைஞர்கள் பெருக வேண்டும். அந்தச் சத்தியப் பிரவாகத்தில்தான் இங்குள்ள எல்லாக் குறைகளும் தீரும். மாணவ வாழ்க்கை உல்லா சத்துக்காக அல்ல. அண்ணாச்சியின் இலட்சியம் தொண்டு செய்வது. இனி உங்கள் இலட்சியமும் அதுவாக இருக்க வேண்டும். தொண்டனாகவே இறக்க ஆசைப்பட்டார் அவர். அவருடைய ஆசை நிறைவேறிவிட்டது. எதிர்காலத் தில் உங்களுக்கு ஆயிரம் பெரிய தலைவர்கள் கிடைக் கலாம். ஆனால் அண்ணாச்சியைப் போல் இப்படி ஒரு நல்ல தொண்டர் கிடைப்பாரா என்பது சந்தேகம்தான். என்னை மன்னியுங்கள். துயரம் தொண்டையை அடைக் கிறது. இதற்கு மேல் என்னால் எதுவும் இப்போது பேச முடியவில்லை.” -