பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . 49

தள்ளிப்போட முயலலாம் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் நாம் அதை எதிர்த்துப் போராட வேண்டியி ருக்கும். மற்ற விவரம் நாளைக்குப் பேசலாம்” என்று ஃபோனை வைத்தான் பாண்டியன். டெலிபோன் கூண்டி லிருந்து வெளியேறி அறைக்குத் திரும்பும்போது ஒர் இனிய பாடலின் முதல் வரின்ய அவன் இதழ்கள் சீட்டியடித்தன. கால்களுக்கோ தரையில் நடப்பதாகவே தோன்றவில்லை. நறுமணம் நிறைந்த மல்லிகை மலர்களை குவியல் குவியலாகக் குவித்து அந்தப் பூம்படுக்கையின் மேல்நடந்து போவது போல் உணர்ந்தான் அவன். அவளுடைய அன்பு அவனை மிகப் பெரிய கர்வமுடையவனாக்கியிருந்தது. அன்பு காரணமாக ஏற்படும் கர்வங்கள்தான் எத்தனை இனிமையாக இருக்கின்றன என்று எண்ணியபடியே அறைக்குச் சென்றான் பாண்டியன். அறையில் அவன் நுழைந்ததுமே, “ரெஜிஸ்ட்ரார் ஆபீசிலிருந்து ஒரு ஸ்பெஷல் மெலஞ்சர் வந்து உனக்காக இந்தக் கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போனான்” என்று பொன்னையா ஒரு கவரை எடுத்து நீட்டினான். பல்கலைக் கழக முத்திரையோடு கூடிய அந்த உறையில் அதிக அவசரத்தைக் குறிக்கும் ‘வெரி அர்ஜண்ட் ரப்பர் ஸ்டாம்பு குத்தப்பட்டிருந்தது. உறையைக் கிழித்துக் கடிதத்தைப் படித்தான் பாண்டியன். பல்கலைக் கழக எல்லையிலும் மாணவர்களிடையேயும் நிலவும் அமைதியற்ற சூழ்நிலையை முன்னிட்டும் நடக்கவி ருக்கும் மாணவர் பேரவை தேர்தலை முன்னிட்டும் உருவாகியிருக்கும் சூழ்நிலைகளைப் பற்றிப் பேசி முடிவு செய்வதற்காகத் துணை வேந்தர், பதிவாளர், துணைப் பதிவாளர், பேரவைத் தேர்தலுக்குப் பிரதம தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டிருந்த பொருளாதாரத் துறைத் தலைவர் பூதலிங்கம் ஆகியோர் அடங்கிய குழு மாணவர் பிரதிநிதிகளையும் தேர்தலுக்கு விண்ணப்பம் கொடுத்திருந்தவர்களையும், முன் மொழிந்திருந்தவர் களையும், வழி மொழிந்திருந்தவர்களையும் உடனே சந்தித்துப் பேசுவதற்காக இரவு பத்தரை மணிக்கு ஒர் அவசரக் கூட்டம் கூட்டி அழைத்திருந்தது. கூட்டம்

ச.வெ-4 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/51&oldid=608850" இலிருந்து மீள்விக்கப்பட்டது