பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 சத்திய வெள்ளம் ! நா. பார்த்தசாரதி

மாறிய பிறகு திரும்பப் படித்துப் பார்த்தாலும்கூட ஒரு காலத்தின் நிலைமைகளைத் துல்லியமாகவும் துணிவாகவும், ஒன்றுவிடாமல் வரைந்து வைத்த ஒர ஒவியமாக இது தெரிய முடியும். எதையும் அப்படியே பிரதிபலிக்கும் இரசம் மழுங்காத புதுக் கண்ணாடியைப் போல் எந்தச் சமூகத்திலும் அந்தச் சமூகத்தின் இளைஞர்கள்தான் மீதமிருக்கிறார்கள். அதனால்தான் இந்தக் காலப் பின்னணியைக் காட்டுகிற கருவியாகஆடியாக இந்நாவலில் அவர்களே வருகிறார்கள்.

இதில் வருகிற அண்ணாச்சியும், பாண்டியனும், கண்ணுக்கினியாளும், மணவாளனும், பிச்சைமுத்துவும், கதிரேசனும், துணைவேந்தரும், பேராசிரியர் பூதலிங்கமும் பொழில் வளவனாரும், பூரீராமனும், இராவணசாமியும், அமைச்சர் கரியமாணிக்கமும் வெறும் கதாபாத்திரங்கள் மட்டுமில்லை. 1966-1971-க்கு இடையில் ஏதோ சில ஆண்டுகளை - (அவை எந்த ஆண்டுகளாக இருந்தால் தான் என்ன?, அப்படி அப்படியே சித்திரித்துக் காட்டும் பிரதி நிதிகளாகவே அவர்கள் இந்தக் கதையில் வருகிறார்கள், வந்தார்கள். அண்ணாச்சியைப்போல் விளம்பரத்தையும், புகழையும் விரும்பாமல், பொதுக் காரியங்களுக்காக ஒடாய் உழைத்துத் தேய்ந்து மாயும் தொண்டன் ஒருவன் ஒவ்வோர் இடத்திலும் ஏதாவது ஒரு பெயரில் தெய்வத்தின் காரியங்களைச் செய்தபடி பாமர மனிதனாக நடமாடிக் கொண்டிருப்பான். அவனைத் தேடி அடையாளம் கண்டு மரியாதை செய்கிற போதுதான் சமூகமும் மரியாதைக்கு உரியதாகிறது. சமூகத்தின், மரியாதையை நாம் கணிப்பதற்கு அது யார் யாரை மரியாதை செய்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டியதா இருக்கிறது. அப்படி மரியாதைகளைத் தெ ந்து கொண்டவர்களுக்கு இந்த நாவலின் அர்த்தங்கள்-உள்ளர்த்தங்கள் எல்லாம் மிகவும் நன்றாகவே புரிந்திருக்கும் என்பது என் நம்பிக்கை.

- நா.பா.