பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சத்திய வெள்ளம்

பல்கலைக் கழக எல்லைக்குள்ளேயே இருந்த துணை வேந்தர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. பேராசிரியர்களுக்கும், விரிவுரையாளர் களுக்கும், பதிவாளர் முதலிய அலுவலக ஊழியர்களுக்கும் பல்கலைக் கழக எல்லைக்குள்ளேயே வீடுகள் இருந்ததால் இரவு பத்தரை மணிக்குக்கூட எல்லாரும் வர முடியும் என்று துணைவேந்தர் அதை எமர்ஜென்ஸி மீட்டிங் ஆக ஏற்பாடு செய்திருந்தார். பாண்டியன் அந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தபோதே மோகன்தாஸும் அவர் களோடு கருத்து ஒற்றுமை உள்ள பெரும்பான்மையான மாணவர் பிரதிநிதிகளும் அங்கே வந்து சேர்ந்து விட்டார்கள். பாண்டியன் அவர்களைக் கேட்டான்:

“என்ன செய்யலாம்? இந்தக் கூட்டத்தைப் பொருட் படுத் திப் போக லாமா ? அல்லது நம் முடைய ஆட் சேபணையைக் காட்டுவதற்கு அடையாளமாகப் போகாமலே இருந்துவிடலாமா?” - -

“போவது போகாததைப் பற்றி அப்புறம் முடிவு செய்வோம். நம்முடைய பல்கலைக் கழக எல்லையில் இப்போது ஏதோ நெருக்கடி நிலைமை உருவாகியி ருப்பதாக வி.சி. இந்த அவசரச் சுற்றறிக்கையில் சொல்லியி ருக்கிறாரே, அது என்ன நெருக்கடி என்பதுதான் எனக்குப் புரியவில்லை. நெருக்கடி நிலைமை இருக்கிறதா அல்லது நெருக்கடி நிலைமையை உண்டாக்கப் பார்க்கிறார்களா என்பதுதான் முதலில் நமக்குத் தெரிய வேண்டும்” என்று மோகன்தாஸ் ஆத்திரத்தோடு கூறியதற்கு மறுமொழியாக, - “நெருக்கடி நமக்கல்ல. வி.சி.க்குத்தான் ஏதோ நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது” என்று கூறினான் உடனிருந்த மாணவர்களில் ஒருவன். ஆளும் கட்சிக்கு எதிரான தரப்பைச் சேர்ந்த தேசிய மாணவர்கள் பெருவாரியாக வெற்றிபெற்று விடுவார்கள் என்ற நிலைமை உறுதியானதும் துணைவேந்தரை நிர்ப் பந்தப் படுத்திப் பணியவைத்துப் பல்கலைக் கழக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/52&oldid=608838" இலிருந்து மீள்விக்கப்பட்டது