பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அத்தியாயம்

துணைவேந்தரின் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது. அங்கே வந்து உட்கார்ந்திருந்த கோட்டச் செயலாளரைத் தான் அவர்கள் அந்நியராகக் குறிப்பிடுகிறார்கள் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. அந்த ஆளிடம் தம் வாயால் அதை எப்படிச் சொல்வது என்று பயந்தார் அவர். தம்முடைய பயத்தை மறைக்க முயன்று கொண்டே அவர்கள் யாரை அங்கிருந்து வெளியேற்ற விரும்புகிறார் கள் என்பது புரிந்தும், புரியாததுபோல,

“அப்படி அந்நியராக இங்கே யாரும் இல்லையே?” என்று ஒவ்வொரு வார்த்தையாக இழுத்து நிறுத்தியபடி மாணவர்களை ஏறிட்டுப் பார்த்தார் துணைவேந்தர்.

அவர் வேண்டும் என்றே ஒன்றும் தெரியாதது போல் நடிப்பது பாண்டியனுக்கு ஆத்திரமூட்டியது.

“நீங்கள் விரும்பினால் இங்கே உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் அந்த அந்நியர் யாரென்று நாங்களே சுட்டிக்காட்டுவதற்குத் தயாராக இருக்கிறோம் சார்!”

இந்த நிலையில் கோட்டச் செயலாளருக்கே ரோஷம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

“உங்களை நான் அப்புறமா வந்து பார்க்கிறேங்க” என்று மேல்துண்டு தரையில் புரள நடந்து வெளியேறி னார், அந்த ஆள். அவருக்கு ஆதரவாக வாக்-அவுட்” செய்வது போல் அன்பரசன் முதலியவர்களும் தொடர்ந்து வெளியேறி விட்டார்கள். துணைவேந்தர், பாண்டியன், மோகன்தாஸ் முதலிய மற்ற மாணவர்களிடம் பேசத் தொடங்கினார்.

“பல்கலைக் கழக எல்லையில் இப்போது நிலவும் நெருக்கடி நிலையை உத்தேசித்துத் தேர்தல்களையெல்லாம் தள்ளிப்போடலாம் என்று நினைக்கிறேன். நாளையே ‘ஒரியண்டேஷன்டே செலபரேட் செய்து விட்டுப் படிப் பிலும், வகுப்புகளிலும், பாடங்களிலும் கவனம் செலுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/55&oldid=608832" இலிருந்து மீள்விக்கப்பட்டது