பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சத்திய வெள்ளம்

தலாம் என்று தோன்றுகிறது. வழக்கமாக ஜூலை கடைசி யிலேயே ஒரியண்டேஷன் டே'யை முடித்துவிடுவோம். இந்த வருஷம்தான் எல்லாமே தாமதமாகிவிட்டது. இனி மேலாவது தாமதமில்லாமல் காரியங்களைச் செய்வதற்கு நீங்கள் எல்லோரும் என்னோடு ஒத்துழைக்க வேண்டும். அன்பரசன் தரப்பினரும் அவர்களைச் சேர்ந்த மற்ற மாணவர்களும் ஏற்கெனவே இதற்கு ஒப்புக் கொண்டு தங்கள் ஒத்துழைப்பைத் தர இணங்கியுள்ளனர்.”

‘அவர்கள் இவருக்கு ஒத்துழைப்பைத் தர இணங்கி யிருக்கிறார்களென்பது பொய். இவர் அவர்களோடு ஒத்துழைக்க இணங்கியிருக்கிறார் என்பதுதான் மெய்’ என்று பாண்டியன் மோகன்தாஸின் காதருகே மெல்லச் சொன்னான். “நீ பேசாமல் இரு. இவர் நம்மையெல்லாம் முட்டாளாக்கப் பார்க்கிறார். இவருக்குச் சரியான பாடம் கற்பிக்கலாம்” என்றான் மோகன்தாஸ். ஏறக்குறைய மோகன்தாஸைப் போன்ற அதே மனநிலையில் தான் மற்ற மாணவர்களும் இருந்தனர். துண்டுப் பிரசுரங்கள் வழங்கிச் சுவரொட்டிகள் ஒட்டி எல்லா ஏற்பாடுகளும் செய்து வெற்றிக்காகக் கடுமையாக உழைத்துவிட்ட பின் மாணவர் பேரவைத் தேர்தலே கிடையாது என்பதை அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாமலிருந்தது. மேலும் தங்கள் முன்னிலையிலேயே அன்பரசன் முதலியவர்களிடமும் இதைப் பற்றிப் பேசாமல், ஏற்கனவே இதுபற்றி அவர் களிடம் நான் தனியே பேசி இணங்கச் செய்துவிட்டேன் என்று துணைவேந்தர் கூறியது அவர் மேல் சந்தேகம் கொள்ள வைப்பதாயிருந்தது. -

“இனி நீங்கள் நினைப்பதைச் சொல்லலாம்” என்று அவர்களை நோக்கி வேண்டினார் துணைவேந்தர். மோகன் தாஸ் மாணவர்கள் சார்பில் மறுமொழி கூறினான்:

“பேரவைத் தேர்தலும் நடந்து முடிந்த பின்புதான் ஒரியண்டேஷன் நாள் கொண்டாடப்படுவது வழக்கம் சார்! பழைய வி.சி. காலத்திலிருந்து அப்படித்தான் நடக்கிறது.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/56&oldid=608829" இலிருந்து மீள்விக்கப்பட்டது