பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 55

“வீணாகப் பழைய காலத்தை ஏன் இழுக்கிறீர்கள்?

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்.”

“மன்னிக்க வேண்டும் சார்! இப்போது நாம் எதைச் செய்ய வேண்டாமோ அதைப் பற்றித்தான் நீங்கள் எங் களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நம்முடைய பல் கலைக் கழக விதிகளில் - பக்கம் அறுபது - மாணவர் உரிமைகள் - முப்பத்தாறாவது பிரிவின்படி ஒவ்வொரு பிரதி நிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான உரிமைகளை நாங்கள் பெற்றிருக்கிறோம்.”

“அதே அறுபதாவது பக்கத்தில் நாற்பத்தேழாவது விதி யின்படி அசாதாரணமான நிலைகள் நிலவுகையில் துணை வேந்தரோ, பதிவாளரோ, மாணவர் பேரவைத் தேர்தலை நிறுத்தவோ, பேரவையைக் கலைக்கவோ உரிமை பெற்றி ருக்கிறார்கள் என்றும் இருக்கிறது அல்லவா?”

“எந்த அசாதாரணமான நிலைமையும் இங்கு இப் போது இல்லை. எல்லாம் சாதாரணமாகவும் அமைதியா கவும்தான் இருக்கிறது. தேர்தல்களை நடத்திப் பேரவைத் தலைவர், செயலாளர்களைத் தேர்ந்தெடுத்தபின் மறுநாளே நீங்கள் ஒரியண்டேஷனை வைத்துக் கொள்வதில் எங்களுக்கு மறுப்பில்லை. தேர்தலுக்காக நாங்கள் எல்லா ஏற்பாடுகளையும் சிரமப்பட்டுச் செய்திருக்கிறோம். இந்த நிலைமையில் நீங்கள் எங்களை ஏமாறச் செய்யக் கூடாது.”

இதைக் கேட்டுத் துணைவேந்தர் தாயுமானவனார் பிரதம தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கத்தைப் பார்த்தார்.

“மிஸ்டர் பூதலிங்கம்! இது சம்பந்தமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?”

“மன்னிக்க வேண்டும் சார்! தேர்தல்களை நிறுத்து வதற்கான எந்த அவசியமும் நேர்ந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இன்று மாலையிலும், முன்னிரவிலும் நம் சர்வகலா சாலை எல்லையில் தெரிந்த பதற்ற நிலைமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/57&oldid=608827" இலிருந்து மீள்விக்கப்பட்டது