பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சத்திய வெள்ளம்

செயற்கையாக உண்டாக்கப்பட்டதாகும். அதை ஒரு நெருக்கடி நிலைமையாகக் கருதித் தேர்தல்களைத் தள்ளிப் போட வேண்டியதில்லை” என்று பேராசிரியர் பூதலிங்கம் துணைவேந்தருக்கு மறுமொழி கூறியபோது மாணவர்கள் அவரை நன்றியோடு பார்த்தார்கள். பதிவாளரும், துணைப் பதிவாளரும் வாயையே திறக்கவில்லை.

துணைவேந்தர் உடனே எந்த மறுமொழியும் கூறாமல் சிந்தனையில் ஆழ்ந்தவர்போல் காணப்பட்டார். மாணவர் களும் பேராசிரியர்களும் கூறியதை உடனே ஏற்கவோ இசையவோ அவர் தயங்குவதாகத் தெரிந்தது. இது தொடர்பாக அவர் தமக்குத்தாமே செய்து கொண்ட ஒரு முடிவிலிருந்து மாற விரும்பாததுபோல் தோன்றினார். ‘ஹிஸ் மைண்ட் இஸ் மேட் அப், ஹி வோண்ட் சேஞ்ஜ் ஹிஸ் டிஸிஷன்’ என்று மோகன்தாஸ் பாண்டியனின் காதருகே மெல்லச் சொன்னான்.துணைவேந்தர், பதிவாளர், துணைப் பதிவாளர்-மூன்று பேரும் உட்புறம் இருந்த அறைக்குச் சென்று கலந்து பேசினார்கள். பேராசிரியர் பூதலிங்கத்தை அவர்கள் கூப்பிடவும் இல்லை. அவராக அவர்களோடு உள்ளே போகவும் இல்லை. துணை வேந்தர் முதலிய மூவரும் தனியே கலந்து பேச உட்புறம் சென்றி ருந்த பத்துப் பதினைந்து நிமிஷங்களில் இங்கே வெளியே மாணவர்கள் தங்கள் பொருளாதாரப் பேராசிரியரோடு மனம்விட்டுப் பேச முடிந்தது. பாண்டியன் பேராசிரியரைக் கேட்டான்: -

“பல்கலைக் கழக எல்லையில் பேரவைத் தேர்தல் நடத்தப் போதுமான டிஸிப்ளின் இருக்கும் போது இவர் ஏன் சார் அதைத் தடை செய்துவிடத் துடிக்கிறார்?”

“ முதியவர்கள் எவற்றையெல்லாம் வெற்றிகரமாகச் செய்ய முடியவில்லையோ அவையெல்லாம் இளைஞர் களுக்குத் தடை செய்யப்படுகின்றன. அல்லது ஒழுக்கக் குறைவானவையாகப் பிரகடனம் செய்யப்படுகின்றன:என்பதாக ஆண்டன் செகாவ் கூறியிருக்கிறான். இதைத் தவிர வேறு எந்தப் பொருத்தமான பதிலை இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/58&oldid=608826" இலிருந்து மீள்விக்கப்பட்டது