பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 59

போட்டுவிட்டு அப்புறம் வி.சி.யைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்று துடித்தார்கள் மாணவர்கள். பாண்டியனுக்கு அந்தக் கல்லெறியால் நெற்றியில் ஒரு சிறு காயம் ஏற்பட்டிருந்தது. “இப்படி ஒரு கலகமும் மோதலும் ஏற்பட்டு அதைச் சாக்காக வைத்தா வது தேர்தல்களை நிறுத்தி விடவேண்டும் என்றுதான் அவர்கள் தவிக்கிறார்கள். தயவு செய்து இதை ஒரு பெரிய கலகமாக்கி எதிர்த்துப் போரிடாதீர்கள். நீங்களே இதை ஒரு பெரிய கலகமாக்கிவிட்டால் அவர்களுக்கு ரொம் பவும் வசதியாகிவிடும். வேண்டாம். வாருங்கள், முதலில் கல்லெறியில் காயமுற்ற நண்பர்களைச் சர்வகலாசாலை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுவோம். மெடிகல் ஆபீஸரிடமே இந்தக் கல்லெறிக்கு ஒரு சாட்சியமும் பெற்ற மாதிரி ஆகும்” என்று உடன் வந்த பொருளாதாரப் பேராசிரியர்தான் அவர்கள் உணர்வை அப்போது கட்டு படுத்தினார். அவர் சொல்வதில் உள்ள நியாயம் அவர் களுக்கும் புரிந்தது. பல்கலைக் கழகத்தின் வடகோடிப் பகுதியிலிருந்த மருத்துவக் கல்லூரியின் அருகில் அவர்கள் போய்ச் சேரவே இரவு ஒரு மணியாகிவிட்டது. அதற்கு மேல் மெடிகல் ஆபீஸரை எழுப்பிக் கொண்டு வந்து விவரங்களைச் சொல்லிச் சிகிச்சை பெற்றுத் திரும்பும் போது இரவு இரண்டேகால் மணி ஆகியிருந்தது. பத்திரமாக ஒவ்வொரு மாணவரையும் விடுதி அறைக்குக் கொண்டு போய்ச் சேர்த்த பின்பே பேராசிரியர் பூதலிங்கம் வீடு திரும்பினார். பாண்டியனும், மோகன்தாஸும், “நீங்கள் தனியாகப் போகக் கூடாது ஸார்! நாங்கள் வீடுவரை உங்களுக்குத் துணையாக வந்துவிட்டுத் திரும்புகிறோம்” என்று அவரோடு புறப்பட்டார்கள். ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார். - - .

“தான் தனியாகப் போவதைவிட என்னோடுதுணைக்கு வந்துவிட்டு நீங்கள் தனியாகத் திரும்புவதுதான் அதிக அபாயம் நிறைந்தது. எனக்கு ஒரு கெடுதலும் வராது. நான் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்து விடுவேன்” என்று கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/61&oldid=608818" இலிருந்து மீள்விக்கப்பட்டது