பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 61

ஆஃப்டர் வீ மஸ்ட் பி வீரியஸ் எபெளட் அவர் ஸ்டடீஸ்’ என்று லெக்சர் அடிக்கலாம் என்பதாகக் கனவு கண்டு கொண்டிருக்கிறார் வி.சி. அது நடக்காது. அவர் ஒரியண்டேஷன் தினத்துக்கான சொற்பொழிவைத் தொடங்கும்போது எதிரே மைதானம் காலியாக இருக்கும். அப்படியும் அவர் வழிக்கு வரவில்லை என்றால் எல்லாப் பிரிவு மாணவர்களும் சேர்ந்து ஊர்வலமாகச் சென்று அவரிடம் நம் கோரிக்கையை மீண்டும் வற்புறுத்துவோம்.”

“இன்னொரு விஷயம் மோகன்தாஸ்! நாளன்றைக்கு மாலையில் பல்கலைக் கழகப் படிப்பு முடிந்து வெளி யேறும் பழைய மாணவர் தலைவர் மணவாளனுக்கு நாம் லேக் வியூ ஹோட்டலில் ஒரு தேநீர் விருந்து கொடுக் கிறோம். அவர் இப்போது மதுரையில் இருக்கிறார். இந்த விருந்துக்காகவே வந்து போகச் சொல்லி அண்ணாச்சியும், நண்பர்களும் மணவாளனுக்குக் கடிதம் எழுதியிருக் கிறார்கள். கான்வொகேஷனுக்கு அவர் வருவாரோ அல்லது தபாலிலேயே பட்டத்தை வரவழைத்துக் கொள் வாரோ, தெரியவில்லை. அதனால்தான் இப்போதே அவரை வர வழைத்துப் பாராட்டையும் பிரிவுபசாரத் தையும் நடத்திவிட முடிவு செய்தோம். அவரிடமும் இதைப் பற்றி யோசனை கேட்கலாம்.”

“அருமையான ஐடியா பாண்டியன்! இந்தப் பல் கலைக் கழகத்திலேயே ஒரு குறிப்பிட்ட இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மாணவர் இயக்கத்தைப் பிரமாதமாகத் தலைமை ஏற்று நடத்திய அசகாய சூரன் மணவாளன் தான். இப்போது இங்கே மணவாளன் வர நேர்வது நம் பாக்கியம். வரட்டும். அவரிடமும் நாம் யோசனை கேட்கலாம்.”

மறுநாள் காலையில் விடியும் போதே மலையின் எல் லாப் பகுதிகளிலும் பன்னிர் தெளிப்பதுபோல் பூஞ்சாரல் பெய்து கொண்டிருந்தது. விடிந்த பின்னும் மெல்லிய மங்கலான இருள் மூட்டம் மலையைச் சூழ்ந்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/63&oldid=608814" இலிருந்து மீள்விக்கப்பட்டது