பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 67

என்று கண்ணுக்கினியாளைக் கைலாகு கொடுத்து மேஜை மேல் ஏற்றிவிட்டுத் தான் கீழே இறங்கிக் கொண்டான்.

“இது சுயநலமிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம். இதில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்” என்றாள் அவள். கண்ணுக்கினியாளின் தோற்றத்துக்கும் இனிமையான குரலுக்கும் கூட்டத்தை அப்படியே வசீகரித்துவிடும் சக்தி இருப்பதைப் பாண்டி யன் கண்டான். அடுத்து மோகன்தாஸ் பேச இருந்தான். அதுவரை மெல்லிய பூஞ்சாரலாக இருந்த தூறல் திடீ ரென்று பெருமழையாக வலுத்துவிடவே, மாணவர்கள் கலைந்து போக மாட்டார்கள் என்ற நிலை இருந்தும் மோகன்தாலே இரண்டு வாக்கியத்தில் சுருக்கமாகப் பேசி முடித்துவிட்டான். வகுப்புகளுக்குப் போக வேண்டாம்’ என்ற கோரிக்கையோடு அவர்களே மாணவர்களை விடுதிகளுக்குக் கலைந்து போகச் சொல்லிவிட்டார்கள். ரிஜிஸ்திரார் ஆபீஸ் வராந்தாவில் பாண்டியனும், கண்ணுக்கினியாளும், மோகன்தாஸும் மற்றும் சில மாணவர்களும் கூட்டமாகப் பேசிக்கொண்டு நின்றார்கள். “தியேட்டர் சயின்ஸ் சம்பந்தமாக ஒரு புதுப் புத்தகம் வந்திருக்கிறது. யூனிவர்சிடி லைப்ரரிக்குப் போக வேண்டும். நீங்களும் என்னோடு வருகிறீர்களா?” என்று கண்ணுக் கினியாள் பாண்டியனைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். ரிஜிஸ்திரார் ஆபீஸிலிருந்து விடுதிக்குப் போக வேண்டு மானால் நடுவே ஒரு பர்லாங் தொலைவு மைதானத்தில் நனைய வேண்டியிருக்கும். நூல் நிலையக் கட்டிடத்துக்குப் போக வேண்டுமானால் அப்படியே வராந்தாவில் சிறிது தூரம் நடந்து நனையாமலே போய்விடலாம் என்ற எண்ணத்தில் பாண்டியனும் மோகன்தாஸிடம் சொல்லிக் கொண்டு அவளோடு புறப்பட இருந்தான். அப்போது மழை நீரைக் கிழித்துக் கொண்டு மைதானத்தில் ஒரு ஜீப் வந்தது. அருகே வந்ததும் அது போலீஸ் ஜீப் என்று தெரிந்தது. ரிஜிஸ்திரார் அலுவலக வராந்தாவை ஒட்டி ஜீப் வந்து நின்றதும் அதிலிருந்து ஒரு ஸ்ப்-இன்ஸ்பெக்டரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/69&oldid=608802" இலிருந்து மீள்விக்கப்பட்டது