பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சத்திய வெள்ளம்

இரண்டு கான்ஸ்டேபிள்களும் இறங்கினர். பல்கலைக்கழக எல்லைக்குள் போலீஸைப் பார்த்ததும் பாண்டியன் தயங்கி நின்றான். அவர்கள் ரிஜிஸ்திரார் அலுவலகத்துக்கு அவர் கூப்பிட்டனுப்பி வந்திருக்கிறார்களா அல்லது வேறு எதற்காக வந்திருக்கிறார்கள் என்று அறியும் ஆவலில் பாண்டியனும், மோகன்தாஸும், கண்ணுக்கினியாளும், சில மாணவர்களும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

ஆனால் அந்த இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டேபிள் களும் சொல்லி வைத்ததுபோல் தங்களை நோக்கி நடந்து வரவே பாண்டியனும், மோகன்தாஸும் திகைத்தனர். இன்ஸ்பெக்டர் அருகே வந்து கூறினார்:

“நேற்றிரவு வி.சி. வீட்டருகே நடந்த கல்லெறி சம்பந்த மாக உங்கள் இருவரையும் கைதுசெய்ய வந்திருக்கிறோம்.” - பாண்டியன் ஆத்திரம் தாங்காமல் எரிச்சலோடு அந்த இன்ஸ்பெக்டருக்குப் பதில் கூறினான்:

“கல்லெறிந்தவர்களை விட்டுவிட்டுக் கல்லெறி பட்டவர்களைத் தேடி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டரை நாங்கள் இன்றுதான் முதன் முதலாகச் சந்திக்கிறோம் சார்.” - “ஆன் வாட் ஆதாரிட்டி ஹாவ் யூ எண்டர்டு இன் டு தி யூனிவர்சிடி காம்பஸ்?” என்று கண்ணுக்கினியாள் சீறியபோது, “யுவர் வி.சி. ஃபோன்டு மீ...” என்று சிரித்துக்கொண்டே பதில் கூறினார் இன்ஸ்பெக்டர்.

ஐந்தாவது அத்தியாயம்

துணைவேந்தர் தம்முடைய பதவியில் நீடிப்பதற்காக அரசாங்கத்திற்கும் அரசாங்கமாக இருந்து ஆளுகிற கட்சிக்கும் தொடர்ந்து நல்ல பிள்ளையாக இருக்க விரும்பு கிறார் என்று தெரிந்தது. அதற்காகப் பல்லாயிரக் கணக்கான மாணவர்களைப் பகைத்துக் கொள்ளவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/70&oldid=608798" இலிருந்து மீள்விக்கப்பட்டது