பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 69

அவர் தயாராக இருந்தார். தங்கள் இரண்டு பேரையும் குறிப்பிட்டுப் புகார் செய்து பல்கலைக்கழக எல்லைக்குள் போலீஸை வரவழைத்திருப்பதிலிருந்து அவர் எதற்கும் துணியக்கூடியவர் என்பதைப் பாண்டியனும், மோகன் தாஸ்-சம் புரிந்து கொண்டார்கள். எதிர்பார்த்ததுதான் என்றாலும் துணைவேந்தரின் மாணவர் விரோதப்போக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாயிருந்தது.

“எங்களைக் கைது செய்வதற்கு “அரெஸ்ட் வாரண்ட், இருந்தால் காண்பியுங்கள்” என்று பாண்டியன் அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வற்புறுத்திக் கேட்கத் தொடங்கினான்.

“நீங்கள் இருவரும் என்னோடு இப்போது ஸ்டேஷ னுக்கு வந்தாக வேண்டும். இண்ட்டராகேஷனுக்காக ரிமாண்டில் வைப்பதற்கு வாரண்ட் ஒன்றும் அவசிய மில்லை” என்றார் இன்ஸ்பெக்டர். அவர்கள் இருவரும் இன்ஸ்பெக்டரோடு ஸ்டேஷனுக்குப் புறப்படுவதற்குமுன் நடந்தவற்றை உடனே பொருளாதாரப் பேராசிரியரிடமும், மற்ற மாணவர்களிடமும், அண்ணாச்சியிடமும் தெரிவிக் கச் சொல்லி அருகிலிருந்த கண்ணுக்கினியாளிடம் கூறி விட்டுச் சென்றார்கள். தன்னையும், மோகன்தாஸையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு போய் அரட்டி மிரட்டினால் அதன்மூலம் பல்கலைக் கழகத் திலேயே மாணவர் இயக்கம் ஒடுங்கிவிடும் என்று துணை வேந்தர் நினைப்பதை எண்ணி உள்ளுறச் சிரித்துக் கொண்டான் பாண்டியன்.

மழை மிகவும் கடுமையாக இருந்ததனால் ஜீப்பிற்குள் அமர்ந்திருந்தும் அவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேருவதற்குள்ளேயே முக்கால்வாசி நனைந்து போய்விட்டார்கள். மழைமூட்டத்தில் எதிரேயும், பக்கங் களிலும் எதுவுமே தெரியவில்லை. மேகக்குவியல்களின் நடுவில் ஜீப் மட்டும் முன்நோக்கி நகர்வது போலிருந்தது. இன்ஸ்பெக்டர் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு ஜீப்பிற்குள்ளேயே புகையை இழுத்து இழுத்துவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/71&oldid=608796" இலிருந்து மீள்விக்கப்பட்டது