பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சத்திய வெள்ளம்

ஸ்டேஷனில், கான்ஸ்டேபிள்களோடு மாணவர்கள் இரு வரையும் இறக்கி விட்டுவிட்டு இன்ஸ்பெக்டர் ஜீப்பி லிருந்து இறங்காமல் அப்படியே வேறெங்கோ புறப்பட்டுப் போய்விட்டார்.

அவர்களிடம் கான்ஸ்டேபிள்களோ, ஸ்டேஷன் ரைட்டரோ யாருமே கடுமையாக நடந்து கொள்ள வில்லை. அன்பாகவும், சுபாவமாகவுமே நடந்து கொண் டார்கள். ஸ்டேஷன் உள்ளறையிலிருந்த ஒரு நீளபெஞ்சைக் காண்பித்து, இன்ஸ்பெக்டர் வர்றவரை இங்கே உட்கார்ந் திருங்க” என்று உட்கார வைத்துவிட்டார்கள். தங்களுக் காகத் தேநீர் வரவழைத்துக் குடித்தபோது பாண்டிய னுக்கும், மோகன்தாஸுக்கும்கூடத் தேநீர் அளித்தார்கள் அவர்கள், ஆனாலும் பாண்டியனும், மோகன்தாஸும் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். -

அந்த இன்ஸ்பெக்டர் எதற்காக அப்படி அங்கே தங் களைக் கொண்டுவந்து உட்கார்த்தி வைத்துவிட்டுப் போயி ருக்கிறார்? என்பது புரியாமல் சிந்தித்துக் குழம்பிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். வெளியே மழை நின்று போயிருந்தது. கலைந்தும் கலையாமலுமிருந்த மேகங்களி டையே நீலமலைகள் மெல்ல மெல்லத் தெரியத் தொடங்கி யிருந்தன. பாண்டியன் சொன்னான்: “வி.சி. இவ்வளவு தந்திரமாகவும், கேவலமாகவும் நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.”

“நான் எதிர்பார்த்தேன். இந்த வி.சி.யைப் பொறுத்த வரை வி.சி. என்பதற்கே ‘வெரிக் கிளவர், ‘வெரி கன்னிங்’ என்பதுதான் அர்த்தம் என்று கடந்த சில ஆண்டு அனு பவங்களில் நான் தீர்மானமாகப் புரிந்து கொண்டி ருக்கிறேன் பாண்டியன்.”

“நாளைக்கு மாலை பழைய மாணவர் தலைவன் மணவாளனுக்குப் பிரிவுபசார விருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. அதற்கு நாம் இருவரும் போக முடியுமோ, முடியாதோ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/72&oldid=608794" இலிருந்து மீள்விக்கப்பட்டது