பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 71

“நாம் போக முடிந்தாலும் முடியாவிட்டாலும் நம் மாணவத் தோழர்கள் அதைப் பிரமாதமாக நடத்திவிடு வார்கள். அண்ணாச்சி பார்த்துக்கொள்வார். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் மணவாளனை நாம் சந்தித்துப் பேசுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.”

“அதனால்தான் நானும் அவரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் என்னடா என்றால் இங்கே கொண்டுவந்து உட்கார வைத்துக்கொண்டு கழுத்தறுக்கிறார்கள். அரெஸ்ட் வாரண்ட் கிடையாது. விசாரணை கிடையாது. கேள்வி முறை இல்லாமல் எதற்காக இங்கே கொண்டுவந்து உட்கார வைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை?”

“ஒன்றுமே இல்லாமல் சும்மா மிரட்ட வேண்டும் என்பதற்காகக்கூடக் கொண்டுவந்து உட்கார் வைத்திருப் பார்கள். மணி ஒன்றாகிறது. நம்முடைய பகல் சாப்பாட் டுக்கு என்ன செய்யப் போகிறார்களோ?”

பாண்டியனும், மோகன்தாஸும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே அண்ணாச்சி ஒரு பெரிய டிபன் கேரியரோடு வந்து சேர்ந்தார். “ஒன்றும் கவலைப்பட வேண்டாம். முதலில் சாப்பிடுங்க. இங்கேயிருந்து சீக்கிரமாப் போயிடலாம். அதுக்கு ஏற்பாடு நடக்குது” என்றார் அண்ணாச்சி. கான்ஸ்டேபிள்களில் இரண்டொரு வர் அண்ணாச்சிக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருந்தனர். ஸ்டேஷன் பெஞ்சிலேயே இலை போட்டுச் சாப்பிட்டு முடித்தார்கள் அவர்கள். போலீஸ்காரர்கள் குடிப்பதற்குத் தண்ணிர் எடுத்துத் தருவது பரிமாறுவது போன்ற உதவிகளைக்கூடச் செய்தனர்.

அண்ணாச்சி எல்லாம் விவரமாகச் சொன்னார்: “பேராசிரியர் பூதலிங்கம் சாரிடத்தில் போய் நம்ம ‘கண்ணுவும் மற்ற மாணவர்களும் உங்க ரெண்டு பேரையும் போலீஸ் கூட்டிக்கிட்டு வந்ததைப் பற்றிச் சொல்லி வருத்தப்பட்டிருக்காங்க, பூதலிங்கம் சார் உடனே அவங்க கூடவே புறப்பட்டுப் போய் வி.சி.யைப் பார்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/73&oldid=608792" இலிருந்து மீள்விக்கப்பட்டது