பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 75

வீணாகிவிடக் கூடாது என்பதற்காக அதை அப்படியே துணை வேந்தர் மாளிகையை நோக்கித் திருப்பிவிட்டுத் தங்கள் தலைமையில் அழைத்துச் சென்றார்கள் அவர்கள். விரைந்து சிந்தித்து உடனே அந்த முடிவுக்கு வரவேண்டி யிருந்தது. மாலையில் நடத்தத் திட்டமிட்டிருந்த பாடத் தொடக்க நாள் சொற்பொழிவை நடத்தப் போகவிடாமல் துணை வேந்தரை அவர் மாளிகை வாசலிலேயே தடுத்து விட வேண்டும் என்பதும், முதலில் திட்டமிட்டபடி பல் கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தல்களை உடனே நடத்தச் சொல்லி வற்புறுத்த வேண்டும் என்பதும் அப் போது அவர்கள் நோக்கமாயிருந்தது. காலையிலேயே அவர்கள் கைதானவுடன், பலமாணவர்கள் அந்தப் பல்கலைக் கழகத்தின் சான்ஸ்லராகிய மாநில கவர்ன ருக்குத் தந்தி கொடுத்திருந்தார்கள். அரசாங்கம், போலீஸ், துணைவேந்தர் எல்லாருமாகச் சேர்ந்து மாணவர்களை அநியாயமாக அடக்கி ஒடுக்க முயல்வதாகக் கவர்னருக்கு அனுப்பிய தந்திகளில் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். புரோ-சான்ஸ்லராகிய கல்வி அமைச்சரின் துரண்டு தலிலேயே துணைவேந்தர் இவ்வளவும் செய்வதாக அவர்கள் சந்தேகப்பட்டதனால்தான் தந்திகள் சான்ஸ்லரா கிய மாநில கவர்னருக்குத் தரப்பட்டிருந்தன. இரண்டொரு வர் தந்தி நகல்களைக் கல்வி மந்திரிக்கும் அனுப்பியி ருந்தார்கள். ‘ஃபோன் முலம் கவர்னரோ, கல்வி அமைச் சரோ நிலைமை கட்டுக்கு அடங்காமல் போய் மாணவர் கள் கிளர்ந்து எழும்படிவிட்டு விடாதீர்கள் என்று துணை வேந்தரை எச்சரித்திருக்கலாம் என்று தெரிந்தது. பிற் பகலுக்கு மேல் துணை வேந்தரின் போக்கில் ஒரு தந்திர மான மாறுதல் தெரிந்தது. தமது போக்கை ஆதரிக்கும் மாணவர்கள் சில நூறு பேர் கூட இல்லை என்பதும், எதிர்க்கும் மாணவர்கள் பல ஆயிரம் பேர்கள் என்பதும் வீட்டு வாசலில் பிரத்தியட்சமாக வந்து நின்ற ஊர்வலத்தி லிருந்தும் தெரிந்தது அவருக்கு. மாணவர்கள் ஊர்வலமாக அவர் மாளிகைக்குப் போன நேரத்தில் எல்லாப் பகுதி களின் டீன்களும் எல்லாப் பிரிவின் பேராசிரியர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/77&oldid=608785" இலிருந்து மீள்விக்கப்பட்டது