பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சத்திய வெள்ளம்

அங்கே கூடியிருந்தனர். நிலைமையைப் பற்றி அவர்களிட மும் கலந்து பேசியதில் அவர்களில் பலர் மாணவர் பேரவைத் தேர்தலைத் தள்ளிப்போட வேண்டிய அவசிய மில்லை என்றே கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

மாலை நாலரை மணிக்குப் பொருளாதாரப் பேராசிரியரையும் உடன் அழைத்துக் கொண்டு மாளிகை முகப்பில் ஊர்வலமாக வந்து வளைத்துக் கொண்டு நிற்கும் மாணவர்களை எதிர் கொண்டார் துணைவேந்தர். அவரைக் கண்டவுடன் மாணவர்களின் கூப்பாடுகளும், கோபக்குர்ல்களும் அதிகமாயின. பேராசிரியர் பூதலிங்கம் கைகளை உயர்த்தி அமைதியாயிருக்கும்படி மாணவர் களை வேண்டவே, அவர் வேண்டுதலை மதித்து அவர்கள் அமைதி அடைந்தார்கள்.

“மாணவர்களே! ஏற்கெனவே அறிவித்திருந்தபடி இன்று மாலை ஒரியண்டேஷன் நாள் நடைபெறாது. முன்பே திட்டமிட்டபடி உங்கள் பேரவைத் தேர்தல்கள் முடிந்தபின் ஒரியண்டேஷன் நாளை வைத்துக்கொள்ள லாம். இந்த முடிவு உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சி அளிக்கும் என்று நினைக்கிறேன். இப்போது நீங்கள் அமைதியாகக் கலைந்து செல்லலாம்” என்று கூட்டத்தை நோக்கி அறிவித்துவிட்டு அவர்கள் கரகோஷம் ஒய்ந்ததும் அவர்கள் முன்னிலையிலேயே, “மிஸ்டர் பூதலிங்கம்! யூ கேன் கண்டக்ட் தி ஸ்டுடண்ட்கவுன்சில் எலெக்ஷன்ஸ் அஸ் ஷெட்யூல்ட்.” என்றும் சொல்லிவிட்டு உள்ளே சென்றார் துணைவேந்தர்.

“மோகன்தாஸ்! ஆஸ் யூ ஸெய்ட் அவர் வி.சி. இஸ் வெரி கிளவர்.” என்று பாண்டியன் மோகன்தாஸின் காதருகே சொல்லிச் சிரித்தான்.

“இவர் வரையில் வி.சி. என்பதற்கு எக்ஸ்பான்ஷனே வெரி கிளவர்தான் பிரதர்.”

“ரொம்பக் கெட்டிக்காரர்தான்!” “கெட்டிக்காரராயிருக்கட்டும். ஆனால் அடுத்தவர் களை முட்டாளாக்க முயல்கிற அளவு கெட்டிக்காரரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/78&oldid=608783" இலிருந்து மீள்விக்கப்பட்டது