பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 77

யிருக்க வேண்டியதில்லை. படித்தவனுடைய கெட்டிக்கா ரத்தனம் அடுத்தவனைப் புத்திசாலியாக்கப் பயன்பட வேண்டுமேயன்றி அடுத்தவனை ஏமாற்றப் பயன்படுத்தப் படக்கூடாது. “இண்டெலக்சுவல் டிஸ்-ஹானஸ்டி ஷாட்கோ...”

“அங்கங்கே பெரிய பொறுப்புக்களில் இருக்கும் பல அறிவாளிகள் தங்கள் நாணயமின்மையால் வேர்ப் புழுக் களைப்போல் சமூகத்தின் ஆணிவேரை மறைவாக அரித்துக் கொண்டிருக்கிறார்கள். இலைப்புழுக்களையும், கம்பளிப் பூச்சிகளையும்விட வேர்ப்புழுக்கள் அபாயகர மானவை.”

“இன்றைய இந்திய சமூகத்தில் எல்லாத் துறையிலும், எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் அப்படிப்பட்ட வேர்ப்புழுக்களின் அபாயம் இருக்கிறது.”

பேசிக்கொண்டே குழுக்கள் குழுக்களாக மாணவர் கள் விடுதிகளுக்கும், கடைவீதிகளுக்கும், விளையாட்டு மைதானத்துக்கும், காப்பி சிற்றுண்டிக்கும் பிரிந்து சென் றார்கள். பாண்டியனும், கண்ணுக்கினியாளும், மோகன் தாஸாம் வேறு சில மாணவர்களும் அண்ணாச்சி கடைக்குப் புறப்பட்டார்கள். பாண்டியன் கண்ணுக் கினியாளுக்கு நன்றி கூறினான்.

“உனக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஓர் இக்கட்டான சூழ்நிலையில் உன்னிடம் குறிப்பாகச் சொல்லிவிட்டுப் போலீஸ் ஜீப்பில் ஏறிப் போய்விட்டோம். சில மணி நேரத்திற்குள் கவர்னருக்குத் தந்திகளைப் பறக்கச் செய்து எல்லா விடுதி மாணவர்களையும் கட்டுப் பாடாக ஊர்வலத்துக்கு வரச் செய்து காரியங்களை வெற்றி கரமாக்க உன் செயல்களால் நீ பெரிதும் உதவியி ருக்கிறாய்.”

“பிரமாதமாக அப்படி என்ன செய்துவிட்டேன்! உங்களில் ஒருத்தி என்ற முறையில் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தேன். அதற்கு உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/79&oldid=608780" இலிருந்து மீள்விக்கப்பட்டது