பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 79

மிகவும் அழகாகத் தெரிந்தன. கடைசியில் சென்னையி லிருந்தும் மதுரையிலிருந்தும் வெளிவருகிற நாலைந்து தினசரிகளின் உள்ளூர் நிருபர்களை வரவழைத்து உட் காரச் செய்து இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார் அண்ணாச்சி.

“தம்பீ! வாங்க. இவங்கள்ளாம் உங்களை எதிர் பார்த்துத்தான் காத்திருக்காங்க. எல்லாம் விவரமாகச் சொல்லுங்க” என்று மாணவர்களை வரவேற்று நிருபர் களோடு கடையின் உட்புற அறைக்கு அனுப்பிவைத்தார் அவர். பாண்டியனும், மோகன்தாஸும் நிருபர்களுக்கு எல்லா நிலைமைகளையும் விவரமாகச் சொல்லத் தொடங் கினார்கள். எதிர்ப்புறம் மருந்துக் கடைக்குப் போய் ஃபோன் மூலம் பெண்கள் விடுதி வார்டனிடம் பேசிச் சிறிது நேரம் தாமதமாக விடுதிக்குத் திரும்ப அநுமதி பெற்று வந்தாள் கண்ணுக்கினியாள். மதுரையிலிருந்து அவள் தந்தை நாயுடு தமக்கு எழுதிய ஒரு கடிதத்தை அவளிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார் அண்ணாச்சி. “நயினாவுக்குச் சதா என்னைப் பற்றிக் கவலைதான். உங்களை எனக்குக் கார்டியனா நியமிச்சிருக்கிற மாதிரி யில்லே எழுதியிருக்காரு?” என்று கூறியபடி வாசித்து முடித்த கடிதத்தை அண்ணாச்சியிடம் திருப்பிக் கொடுத் தாள் அவள்,

மாணவர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்து கொண்டு நிருபர்கள் புறப்பட்டபோது, “மற்றவங்க பேப் பரிலே எப்பிடி எப்பிடியோ நியூஸ் வரும், நம்ம பேப்பருங் களிலேயாவது நல்லபடியா எழுதுங்க. நிஜத்தைப் போடுங்க” என்று அண்ணாச்சி அவர்களிடம் சொல்லி அனுப்பினார். சிறிதுநேரம் மாணவர்களோடு முதல் நாளிரவு நிகழ்ந்த கல்லெறியைப் பற்றிப் பேசிக் கொண்டி இந்தார் அவர். பாண்டியன் வேடிக்கையாக அதைப் பற்றி விவரித்தான்:

“அன்பரசன் அடிக்கடி கூட்டத்திலே சொல்கிற ஒரு பழைய மேற்கோளுக்கு அவன் புரிந்து கொண்டிருக்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/81&oldid=608774" இலிருந்து மீள்விக்கப்பட்டது