பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சத்திய வெள்ளம்

அர்த்தம் என்ன என்பதே நேற்று நள்ளிரவில்தான் எங் களுக்குத் தெரிந்தது அண்ணாச்சி! ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே நாம் முன் தோன்றி மூத்தவர்கள் என்று வெளியிலே நடக்கிற அவங்க கட்சிப் பொதுக் கூட்டமானாலும் சரி, பல்கலைக் கழகத்தில் நடக்கும் பாட்னி அஸோஸியேஷன் கூட்டமானாலும் சரி, எங்கும் எதிலும் அன்பரசன் இதைக் கூறுவான். அவன் பேச்சில் அடிக்கடி கல் தோன்றிக் கொண்டிருந்தது. நேற்றிரவு செயலிலும் கல் தோன்றிவிட்டது.” இதைக் கேட்டு மோகன்தாஸ் சொன்னான்:

“சே! சே! அவன் ஏதோ பொருத்தமில்லாமல் கிளிப் பிள்ளைபோல் அந்த வரியை எல்லாக் கூட்டங்களிலும் கோட்’ செய்கிறான் என்பதற்காக நீ அவனைக் கிண்டல் செய்! ஆனால் அந்த அழகான வீரப்பாடலைக் கிண்டல் செய்யாதே, பாண்டியன்! எனக்கு மிகவும் பிடித்த பாடல்

f rt

அது !.

“நான் பாடலைக் கிண்டல் செய்யவில்லை மோகன் தாஸ்! லகர, ளகர ழகர உச்சரிப்புக்கள் சரியாக வராமல் அன்பரசன் அந்தப் புறப்பொருள் பாடல் அடியைக் ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த தமிழ்க்குடி’ என்பதற்குப் பதிலாக ‘கள் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலோடு முன் தோன்றி மூத்த தமில்க்குடி’ என்று அழுத்தந் திருத்தமாய் தப்பாகச் சொல்லும்போது கேலிக் கூத்தாயிருக்கும். அவனுடைய பிரசங்கத்தில் இந்த nரியஸ் கொட்டே ஷனே நகைச்சுவையைப் போல்தான் வந்து போகும்.”

“என்ன செய்யலாம்? தமிழ்நாட்டில் இன்றுவரை வெறும் தமிழ் உணர்ச்சி மட்டுமே போற்றப்படுகிறது. தமிழ் அறிவையோ, சிந்தனை வளர்ச்சியையோ போற்றுவதற்குத் தமிழ் மக்கள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. அறிவைப் பட்டினிப் போட்டுவிட்டு உணர்ச்சிக்கு விழா எடுக்கும் வரை நாம் உருப்படமாட்டோம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/82&oldid=608772" இலிருந்து மீள்விக்கப்பட்டது