பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 83

மோகன்தாஸும் மணவாளனை அழைத்துச் சென்றார் கள். அண்ணாச்சி ஏற்பாடுகளைக் கவனிக்க முன்னா லேயே அங்கு போயிருந்தார். *

அங்கே ஹோட்டல் முகப்பில் கண்ணுக்கினியாளும் வேறு சில மாணவிகளும் வருகிறவர்களை வரவேற்று ரோஜாப்பூவும் கல்கண்டும் கொடுத்துக் கொண்டிருந் தார்கள். பாண்டியன் கண்ணுக்கினியாளை மணவாள னுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

கல்கண்டு ரோஜாப்பூ எடுத்துக் கொண்டதும் மோகன் தாஸோடு முன்னால் நடந்து போய்விட்டார் மணவாளன். பாண்டியனுடைய கோட்டில் அவளே ஒரு ரோஜாப்பூவை எடுத்துச் செருக வந்தபோது அந்தக் கையை அப்படியே தடுத்து, “இதில் எது கை? எது ரோஜாப்பூ இரண்டும் ஒரே நிறத்திலிருப்பதால் புரியவில்லை” என்று அவளுக்கு மட்டுமே கேட்கும் தணிவான குரலில் கேட்டுவிட்டுக் குறும்பாகச் சிரித்தான் பாண்டியன். அவனுடைய அந்த வாக்கியம் தன்னுள் ஏற்படுத்திய இன்பச் சிலிர்ப்பைத் தனக்குள்ளே ஓர் இரகசியம் ஆக்கிக்கொண்டு, “மறுபடியும் எச்சரிக்கிறேன். பொருளாதாரம் படிக்கிறீர்கள். அதைக் கோட்டை விட்டுவிட்டுக் கவிஞராகிவிடாதீர்கள்.” என்று பதிலுக்கு அவனை வம்புக்கு இழுத்தாள் அவள்.

“எதிரே தெரிகிற தோற்றம் ஊமையையும் கவிஞ னாக்க முடிந்ததாக இருக்கும்போது நான் மட்டும் என்ன செய்வது? ஐ யாம் ஹெல்ப்லெஸ் மேடம்.”

“அப்புறம் வம்பளக்கலாம் உள்ளே போய் விருந்து ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” என்று அவள் பாண்டியனை உள்ளே துரத்தினாள்.

ஆறாவது அத்தியாயம்

லேக்வியூ ஹோட்டல் முகப்பில் அந்தச் சுகமான குளிர்ந்த மருள் மாலை வேளையில் பாண்டியன் கூறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/85&oldid=608764" இலிருந்து மீள்விக்கப்பட்டது