பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சத்திய வெள்ளம்

இந்த ஒரு வாக்கியத்தினால் விளைந்த மகிழ்ச்சி மயக்கத் திலிருந்து விடுபட்டு மறக்கமுடியாமல் அதை நினைத்தே ஏங்கினாள் கண்ணுக்கினியாள். பாண்டியன் உட்புறம் சென்றபின் யார் யாரோ வந்தார்கள். ரோஜாப்பூவும், கல்கண்டும் எடுத்துக்கொண்டு போனார்கள். அவனோ தான் விளையாட்டாகப் புகழ்ந்துவிட்டுப்போன ஒரு வாக்கியத்தினால் அவள் மனத்துக்குள் ரோஜாப்பூவின் மென்மையையும், கல்கண்டின் இனிமையையும் உணரச் செய்திருந்தான். முன்புறம் வரவேற்பு முடிந்து உள்ளே போய் விருந்தில் அமர்ந்தபோதும், விருந்து முடிந்த பின்பும்கூட அதை அவளால் மறக்க முடியாமலிருந்தது. சக மாணவிகளிடம் பேசும்போதுகூட அவள் இந்த ஞாபகத்திலேயே இருந்தாள். இதில் எது கை? எது ரோஜாப்பூ? இரண்டும் ஒரே நிறத்தில் இருப்பதால் புரியவில்லை. - இந்தத் தொடர்கள் அவளுக்கு மனப்பாடமே ஆகிவிட்டன. பாண்டியன் புகழ்ந்த இந்தப் புகழ்ச்சி இதமான தென்றலைப்போல் அவளுக்குள்ளே புகுந்து வீசிக்கொண்டிருந்தது.

முதலில் தேநீர் விருந்து முடிந்ததும் தொடங்கிய பாராட்டுரைக் கூட்டத்திற்குப் பாண்டியன் வரவேற்புரை கூறினான். மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத்தின் எல்லாப் பிரிவு மாணவர்களின் சார்பிலும் ஒவ்வொரு பிரதி நிதிகள் வீதம் மணவாளனைப் பாராட்டிப் பேசினார்கள். நாட்டில் அப்போதிருந்த எல்லா முக்கிய அரசியல் இயக்கங்களின் சாயல்களும் மாணவர்களிடமும் இருந்தன. ஆனால் இதில் அன்பரசன் குழுவினர் மட்டும் தனி. அவர்கள் அங்கே தென்படவேயில்லை. எல்லாரு டைய பாராட்டுரைகளும் முடிந்தபின் மல்லிகைப் பந்தல் நகரத் தேசிய இயக்கத்தின் சார்பில் அண்ணாச்சி மணவாளனுக்கு மாலை சூட்டினார். முடிவில் மணவாளனின் பதிலுரை மிகவும் உருக்கமாக இருந்தது.

“இந்த அலாரம் கடிகாரம் உங்களை விழிப்பூட்டவோ நினைவூட்டவோ மணியடித்து ஒலிக்கும்போதெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/86&oldid=608762" இலிருந்து மீள்விக்கப்பட்டது