பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 85

எங்கள் நினைவும் பல்கலைக்கழக நினைவும் உங்களுக்கு வரவேண்டும்” என்று மாணவர்கள் சார்பில் ஒர் அலாரம் கடிகாரத்தை மணவாளனுக்கு வழங்கினான் மோகன் தாஸ். விழா முடிந்ததும் மாணவிகள் அவசர அவசரமாக விடுதிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. அவர்கள் வழக்க மாகத் திரும்பும் நேரமாகிவிட்டது. எல்லா மாணவர்களும் கூட்டமாக மணவாளனைச் சூழ்ந்து நின்று பேசிக் கொண்டிருந்ததனால் பாண்டியனைக் கண்டுபிடித்துச் சொல்லிக் கொள்ள முடியாமலே சக மாணவிகளோடு விடுதிக்குத் திரும்பினாள் கண்ணுக்கினியாள். - பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலில் அவர்களுக்கு வழிகாட்டி உதவுவதற்காக மணவாளனை மேலும் ஒரிரு நாள் மல்லிகைப் பந்தலில் தங்கிவிட்டுப் போகுமாறு வற்புறுத்தினார்கள் மாணவர்கள். மணவா ளனும் அதற்கு இணங்கினார். சில காரணங்களை முன்னிட்டுப் பல்கலைக் கழக எல்லைக்குள்ளேயோ விடுதியிலோ அவர் தங்க விரும்பவில்லை. மாணவர் களுக்குச் செலவு வைக்காமல் அண்ணாச்சி கடையிலேயே பின்புறத்து அறையில் தங்கிக் கொள்வதாக மணவாளன் கூறியும் கேட்காமல் அன்றே அப்போதே பிரிவுபசார விருந்து நடந்து முடிந்த அதே லேக்வியூ ஹோட்டலில் மணவாளனுக்கு ஒர் அறை ஏற்பாடு செய்து கொடுத் தார்கள் மாணவர்கள். விருந்து முடிந்ததும் அண்ணாச்சி யின் கடைக்குத் திரும்பாமல் அப்படியே ஹோட்டல் அறையில் தங்கினார் மணவாளன். ஒரு மாணவனை அனுப்பித் தம் கடையிலிருந்த மணவாளனின் சூட்கேஸை ஹோட்டலுக்கு எடுத்துவரச் செய்தார் அண்ணாச்சி.

ஏற்கெனவே திட்டமிட்டபடி பேரவைத் தேர்தலை நடத்தத் துணைவேந்தர் இணங்கியிருந்ததனால் அதற்காக இன்னும் சில நாட்கள் அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

வேட்பாளர்கள் நாளை மாலை ஏழு மணிவரை மனுக்களைத் திரும்பப் பெறலாம். அதற்கு அடுத்த நாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/87&oldid=608760" இலிருந்து மீள்விக்கப்பட்டது