பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சத்திய வெள்ளம்

வேட்பாளர்களின் முடிவான பெயர்ப் பட்டியல் அறிவிக்கப்படும். அதற்கு அடுத்த நாள் தேர்தல் நடந்து முடியும், இந்த நிலைமைகளை எல்லாம் மணவாளனிடம் கலந்து பேசினார்கள் அவர்கள். இரவு உணவையும் லேக்வியூ ஹோட்டலிலேயே முடித்துக்கொண்டு பாண்டி யனும், மோகன்தாஸ்-ம் விடுதிக்குத் திரும்பும்போது பத்தரை மணிக்கு மேலாகியிருந்தது. நிறைய மாணவர்கள் உடனிருந்ததால் எல்லோருமாகச் சேர்ந்து திரும்பினார்கள். “பாண்டியன்! இந்தத் தேர்தல் முடிகிறவரை நீயும், மோகன்தாஸும், நண்பர்களும் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டும். எவ்வளவோ ஆபத்துக்கள் வரும். கடந்த சில ஆண்டுகளில் நம் பல்கலைக்கழகத் தேர்தல்கள் பொதுத் தேர்தல்களைவிட அபாயகரமானதாகியிருக் கிறது” என்று மறுபடியும் அவர்கள் புறப்படும்போதும் எச்சரித்து அனுப்பினார் மணவாளன்.

“அண்ணனுக்கு என்ன உதவி தேவையானாலும் உடனே எனக்குச் சொல்லி அனுப்பனும் “ என்று வேண்டு தலோடு மணவாளனிடம் விடைபெற்றான் பாண்டியன். பல்கலைக்கழக எல்லைக்குள் வந்ததும் மாணவர்கள் அவரவர்கள் விடுதிகளுக்குப் பிரிந்தார்கள்.

பொன்னையா முன்பே திரும்பி வந்து நன்றாகத் துரங்கி விட்டதால் பாண்டியன் அதிக நேரம் தட்டிய பின்பே அவன் எழுந்து வந்து கதவைத் திறந்தான். குளிர் அடங்க முழுக்கை உல்லன் அங்கியை அணிந்து கொண்டு படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டியனும் நன்றாகத் துரங்கிவிட்டான். காலையிலிருந்து நிறைய அலைந்ததாலும் வெடவெடக்கும் குளிரில் நடந்து வந்து அறையின் உள்ளே கம்பளிப் போர்வைக்குள் உடலை நுழைத்த வெதுவெதுப் பினாலும் உறக்கம் கெஞ்சிக் கொண்டு வந்து அயரச் செய்திருந்தது. அந்தத் தன்னை மறந்த தூக்கத்தில் அவன் ஒரு கனவு கண்டான். நளினமான அந்தக் கனவில் நேரம் வளர்ந்ததே தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/88&oldid=608758" இலிருந்து மீள்விக்கப்பட்டது