பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 87

பேரவைத் தேர்தலில் அவன் வெற்றி பெற்றதைப் பாராட்டி மாணவர்கள் அளிக்கும் ஒரு பாராட்டுத் தேநீர் விருந்தில் மாணவிகள் சார்பில் அவனுக்கு அணிவிக்க ஒரு ரோஜாப்பூ மாலையோடு எதிரே வருகிறாள் கண்ணுக் கினியாள். அப்போது அவள் ஸ்லீவ்லெஸ் அணிந்தி ருந்ததால் செழுமையான பொன்னிறத் தோள்கள் பச்சை மூங்கிலாய்த் தளதளவென்று மின்னுகின்றன. அந்த வேளையில் அவன் அவளிடம், “கண்ணே இதில் எதுகை: எது ரோஜாப்பூ இரண்டும் ஒரே நிறத்தில் இருப்பதால் புரியவில்லை!” என்று அதே பழைய வாக்கியத்தினால் வினவுகிறான். ரோஜாப்பூக் கன்னங்கள், ரோஜாப்பூச் செவ்விதழ்கள், ரோஜாப்பூக் கைகள் என்று அவளே ஒரு ரோஜா மாலையாய் மற்றொரு ரோஜா மாலையை வீணே கையில் சுமந்து கொண்டு தன்னெதிரே நிற்பதுபோல் அவனுக்குத் தோன்றுகிறாள்.

“மணமும் நிறமும் கவர்ச்சியும் உள்ள ஒரு மாலை இப்படி மற்றொரு மாலையைச் சுமந்து கொண்டு வரலாமா?”

“போதும் நிறுத்துங்கள்! உங்களைப்போல் கவிகள் அபாயமானவர்கள். வசீகரமான வார்த்தைகளால் எதிரே வருகிறவர்களை நிச்சயமாகத் தங்களுக்கு அடிமைப் படுத்திவிடுகிறார்கள்”

“இல்லை! நீ சொல்வது தவறு. ஒவ்வோர் அழகிய பெண்ணுமே ஒரு கவிதைதான். அவளை மீறிய மற்றொரு கவிதையை வெறும் வார்த்தைகளால் உண்டாக்கிவிடப் போவதில்லை.”

வெளியே அறைக் கதவு பலமாகத் தட்டப்படவே தூக்கமும் கனவும் கலைந்து போயின. இந்த அகாலத்தில் கதவைத் தட்டுவது யாராக இருக்கும் என்ற சந்தேகத் தோடு சுவரில் கையால் துழாவிச் சுவிட்சைப் போட்டான் பாண்டியன். பொன்னையாவும். அப்போதுதான் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருந்தான். கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்ததில் மணி மூன்றரை ஆகியிருந்தது. பாண்டியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/89&oldid=608756" இலிருந்து மீள்விக்கப்பட்டது