பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சத்திய வெள்ளம்

உட்புறத் தாழப்பாளை நீக்கி அறைக் கதவைத் திறந்ததும் சில்லென்று மலைக் காற்று ஈர வாடையோடு வந்து முகத்தில் மோதியது. ஹோட்டல் யூனிபாரத்தில் லேக்வியூ ஹோட்டலின் ரூம் பாய் ஒருவன் அறை வாசலில் நின்று கொண்டிருந்தான். -

“மணவாளன் சார், உங்களை உடனே கூட்டிக் கொண்டு வரச் சொன்னாரு, ஏதோ அவசரமா இன்னிக் குக் காலை அஞ்சு மணி பஸ்ஸுக்கே அவர் மதுரை போகணுமாம்.”

மல்லிகைப் பந்தலில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி விட்டுப் போவதாகச் சொல்லிய மணவாளன் உடனே திரும்பும்படி என்ன அவசரம் வந்திருக்க முடியும் என்று பாண்டியன் மனத்தில் சந்தேகம் எழுந்தது. அந்தச் சந்தேகத்தைத் தேடி வந்திருக்கும் ஹோட்டல் ஊழியனி டம் கேட்டுப் பயனில்லை என்பதால் மப்ளரை எடுத்துக் கழுத்தைச் சுற்றி அணிந்துகொண்டு காலில் செருப்பையும் மாட்டிக் கொண்டு பாண்டியன் புறப்பட்டான். “நானும் கூட வரட்டுமா?” என்று உடன் புறப்படத் தயாரான பொன்னையாவை, “வேண்டரிம்! நீ தூங்கு பொன் னையா! நான் போய்ப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்” என்று பாண்டியனே தடுத்து விட்டான். பாண்டியனை அனுப்பிவிட்டு அறைக்கதவைத் தாழிட்டு விளக்கை அணைத்த பின் படுக்கையில் சாய்ந்த பொன்னையா விடிந்து ஏழு ஏழரை மணிக்குத்தான் மீண்டும் எழுந்தி ருந்தான். -

காலை எட்டு மணிக்குப் பல்கலைக் கழக எல்லை யிலேயே வட பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் ஒரு நண்பனைப் பார்க்கப்போக வேண்டி யிருந்தது பொன்னையாவுக்கு காலை மூன்றரை மணிக்கு மணவாளன் கூப்பிட்டனுப்பிப் புறப்பட்டுச் சென்ற பாண்டியன் இன்னும் அறைக்குத் திரும்பி வந்து சேர வில்லை. போகும்போது பாண்டியன் அறைச் சாவியை எடுத்துச் செல்லவில்லை என்பதை அவனுடைய சாவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/90&oldid=608752" இலிருந்து மீள்விக்கப்பட்டது