பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 89

படுக்கைமேல் கிடந்ததிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. எதற்கும் அவன் திரும்பி வந்தால் பக்கத்து அறையில் கேட்டு வாங்கிக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் ஒரு சாவியை அங்கே எடுத்துக் கொடுத்துவிட்டு, மற்றொரு சாவியால் அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே புறப் பட்டான் பொன்னையா.

அந்த அதிகாலை வேளையில் மரங்கள் அடர்ந்த பல்கலைக் கழகச் சாலை வழியே மருத்துவக் கல்லூரி விடுதிக்கு நடந்து செல்வது மிகவும் சுகமான அநுபவமாக இருந்தது. வழிநெடுக இருபுறமும் பூங்காக்கள், அளவாகக் கத்திரித்து விடப்பட்ட செடிகள், பூக்கள் என்று கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. அந்த வைகறை வேளை யில் கட்டிடங்கள், விடுதிகள், மரங்கள், செடி கொடிகள், மலர்கள் எல்லாம் ஆடாமல் அசையாமல் யாரோ தயாராக எடுத்துக் காட்சிக்கு வைத்த வண்ணப் புகைப்படம் போலிருந்தன. ஃபைன் ஆர்ட்ஸ் பிரிவுக் கட்டிடங்களுக் கும், மருத்துவக் கல்லூரிக்கும் நடுவே இருந்த மிகப்பெரிய திறந்தவெளி அரங்கைக் கடந்து சென்றபோது அதே சாலையில் தனக்குச் சிறிது தொலைவு முன்னால் நாலைந்து மாணவர்களோடு மணவாளன் நடந்து போய்க் கொண்டிருப்பதையும் அந்த நாலைந்து பேரில் பாண்டியன் இல்லை என்பதையும் கவனித்தான் பொன் னையா. ஹோட்டல் ஊழியன் வந்து சொன்னது போல் மணவாளன் அவசரமாக மதுரைக்குப் புறப்பட்டுப் போக வில்லை என்று தெரிந்தது. ஒருவேளை மணவாளனே தம் காரியமாகப் பாண்டியனை வேறெங்காவது அனுப்பியும் வைத்திருக்கக் கூடும் என்று எண்ணியபடி முன்னால் நடந்துபோய்க் கொண்டிருந்த அவர்களை எட்டிப்பிடிக்க விரைந்து நடந்தான் பொன்னையா.

ஐந்தே நிமிடங்களில் பொன்னையா அவர்களோடு போய்ச் சேர்ந்து கொள்ள முடிந்தது. மணவாளனுக்கும், நண்பர்களுக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு, அவன் அவர்களோடு சிறிது தொலைவு நடந்தான். திறந்த வெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/91&oldid=608750" இலிருந்து மீள்விக்கப்பட்டது