பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சத்திய வெள்ளம்

அரங்கின் வட கோடியிலிருந்து காவல் கூர்க்காவின் பூத் அருகிலே ஆடியோ-விஷூவல் ஏற்பாட்டின் கீழ் இரண்டு மூன்று தினங்களில் மாணவர்களுக்குக் காட்டப் பட இருந்த ஒரு திரைப்படத்தைப் பற்றிக் கரும் பலகையில் அறிவிப்பு எழுதி வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அதைப் படிக்க ஒரிரு கணங்கள் தயங்கி நின்றார்கள். அப்போது பொன்னையா, “நீங்கள் அவசரமாக ஊருக்குப் புறப்படப் போவதாக லேக் வியூ ஹோட்டல் ஆள் வந்து பாண்டியன் அண்ணனை ராத்திரி மூன்றரை மணிக்கே கூப்பிட்டானே? அண்ணன் எங்கே?” என்று மணவாளனைக் கேட்டான். பொன்னையாவின் வார்த்தைகளைக் கேட்டு மணவாளனின் முகத்தில் திகைப்போடு சந்தேகமும் குழப்பமும் நிலவின. “நீ என்ன சொல்கிறாய் பொன்னையா? நான் பாண்டியனை நேற்றிரவு விடைகொடுத்து அனுப்பியதற்கு அப்புறம் பார்க்கவேயில்லையே? நான் அனுப்பியதாக யாரோ வந்து அதிகாலை மூணரை மணிக்குக் கூப்பிட்ட தாகச் சொல்கிறாயே, அது யார்?”

இதைக் கேட்டுப் பொன்னையா அப்படியே மலைத் துப் போய் நின்றுவிட்டான். உடனே மணவாளனும் மற்ற மாணவர்களும் பரபரப்படைந்து அவசரமாகப் பொன்னையாவிடம் நடந்ததையெல்லாம் விசாரித்தார்கள். அவனும் எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னான்.

“நேற்றிரவு நான் எவ்வளவோ எச்சரித்து அனுப் பினேன். அவ்வளவும் பயனற்றுப் போயிற்று. பாண்டியன் ஏமாந்து விட்டான். மோசம் போய்விட்டான். விரோதிகள் அவனுக்காக விரித்த வலையில் சரியாகப் போய் விழுந்து விட்டான்” என்றார் மணவாளன். உடனே தாங்கள் போய்க் கொண்டிருந்த காரியங்களையெல்லாம் விட்டு விட்டுப் பாண்டியனைத் தேடுவதற்காக விரைந்தார்கள் அவர்கள். மோகன்தாஸின் அறை, அண்ணாச்சி கடை, லேக்வியூ ஹோட்டல், எல்லா இடங்களிலும் தேடியும் விசாரித்தும் ஒரு பயனும் விளையவில்லை. பாண்டியன் எங்கெங்கே போவான், யார் யாரோடு பழகுவான் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/92&oldid=608748" இலிருந்து மீள்விக்கப்பட்டது