பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சத்திய வெள்ளம்

பையன்கள், ஸ்ர்வர்கள், கிளினர்கள் எல்லாரையும் ஒவ்வொருவராகக் காட்டி முந்திய நாள் பின்னிரவில் பாண்டியனைக் கூப்பிட்டுக் கொண்டு போக விடுதி அறைக்குத் தேடிவந்த ஆளை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கச் சொன்னார். பயனில்லை. பாண்டியனைக் கூப்பிட்டுக் கொண்டு போக வந்த ஆள் மாதிரி அவர்களில் யாரையுமே காண முடியவில்லை. இந்தச் செய்தி அநாவசியமாக வெளியே பரவி விடாமல் காக்க முயன்றார்கள் அவர்கள்.

காலை பத்து மணி வரை பாண்டியனைப் பற்றி ஒரு தகவலும் தெரியாமலிருந்தது. பத்தரை மணிக்கு மோகன் தாஸும் இன்னும் இரண்டொரு மாணவர்களும் பொன்னையாவும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ப் புகார் கொடுத்துவிட்டு வந்தார்கள். பிரதம தேர்தல் அதிகாரியான பேராசிரியர் பூதலிங்கத்துக்கும் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்பட்டார். பாண்டியனை எண்ணி மனம் நெகிழ்ந்தார். கண்கலங்கினார்.

“வாக்குரிமை, ஜனநாயகம் இவை எல்லாம் மன வலிமையும், சகிப்புத் தன்மையும், நிதானமும் உள்ளவர் களின் உயரிய சாதனங்கள். அவை இங்கே வெறும் உடல் வலிமையும் முரட்டுத்தனமும் உள்ளவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் இந்த நாட்டில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள்தான் நடக்க முடியும் போலும்” என்று வேதனையோடு சொன்னார் பொருளாதாரப் பேராசிரியர்.

“போலீசாரை மட்டும் நம்பிச் சும்மா இருந்துவிடா தீர்கள்! நீங்களும் ஒரளவு சிரமம் எடுத்துக் கொண்டாவது தேடவேண்டும்” என்று மாணவர்களிடம் சொல்லியனுப் பினார் அவர், “எங்களால் முடிந்தவரை முயன்று தேடிக், கொண்டுதான் இருக்கிறோம், சார்! விவரம் ஏதாவது தெரிந்தால் உடனே உங்களுக்கு ஏதாவது தெரிந்தாலும் சொல்லியனுப்புங்கள்” என்று மோகன்தாஸும் மற்றவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/94&oldid=608745" இலிருந்து மீள்விக்கப்பட்டது