பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 93

களும் அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது காலை பதினொன்றேகால் மணி. கடையைப் பார்த்துக் கொள்ளும் படி அண்ணாச்சி வேலைக்காரப் பையன்களிடம் சொல்லி விட்டுப் பொன்னையாவோடு வெளியே புறப்பட்டுப் போனார். லேக் வியூ ஹோட்டல் துணிகளையெல்லாம் மொத்தமாகச் சலவை செய்பவர்கள் ஹில்டாப் டிரை கிளீனர்ஸ்தான் என்று அறிய நேர்ந்தவுடன்,

“தம்பீ! ஹில்டாப் தங்கப்பன் அந்த அன்பரசன் வகையறா ஆளுங்களுக்கு ரொம்ப வேண்டியவன். வெளுக் கிறத்துக்கு வந்த லேக்வியூ ஹோட்டல் யூனிஃபார்மிலே ஒண்ணை எடுத்து எவனோ ஒருத்தனுக்கு மாட்டிவிட்டுப் பாண்டியனைக் கூட்டிக்கிட்டு வர்றத்துக்கு அதைப் பயன் படுத்தியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். உங்களுக்கு என்ன தோணுது?” என்று பொன்னையாவைக் கேட்டார் அண்ணாச்சி. அவரது அநுமானம் சாத்தியமாயிருக்கும் என்றே அவனுக்கும் தோன்றியது. எப்படியோ சாதுரிய மாக நினைத்து அந்தச் சிக்கலின் ஒரு நுனிய்ை அவர் கண்டுபிடித்து விட்டதை அவன் வியந்தான். மல்லிகைப் பந்தல் நகரிலிருந்து வெளியேறுகிற இரு பெரிய சாலை களில் ஒன்று கிழக்கே மல்லிகைப் பந்தல் ரோடு, ரயில் நிலையம், மதுரை முதலிய சம நிலத்து ஊர்களுக்காகக் கீழே இறங்குவது. மற்றொன்று மேலே ஏலக்காய், தேயிலை, கோக்கோ எஸ்ட்டேட்டுகள் அடங்கிய மேற்குத் தொடர் மலைகளில் மேற் செல்வது. இந்த இரண்டு சாலைகளி லுமே நகர எல்லைகளில் இருந்த பெட்ரோல் பங்குகள், காட்டிலாகா எக்ஸைஸ் இலாகா செக் போஸ்டுகள் எல்லாவற்றுக்கும் பொன்னையாவோடு போய்ச் சோம்பல் படாமல் துரண்டித் துாண்டிச் சில விவரங்களை விசாரித் தார் அண்ணாச்சி. மேற்கு மலைச் சாலையில் அதிகாலை நான்கு மணிக்கு அசுர வேகத்தில் வந்த ஒரு லாரியைப் பற்றியும் அதில் பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் தென் பட்டதைப் பற்றியும் காட்டிலாகா செக்போஸ்ட் ஆள் அண்ணாச்சியிடம் விவரித்தபோது அவர் முகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/95&oldid=608743" இலிருந்து மீள்விக்கப்பட்டது