பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சத்திய வெள்ளம்

அனுப்பினார். இப்போது இனிமேல் என்ன செய்யலாம் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் அண்ணாச்சி!” என்றான் மோகன்தாஸ். - .

“நமக்குத் தெரிந்த விவரங்களை எல்லாமே போலி ஸ்ாரிடம் கூறி அவர்கள் உதவியோடு பாண்டியனைத் தேடி மீட்கலாம்” என்றான் ஒரு மாணவன். அது சாத்திய மில்லை என்பதை அண்ணாச்சி, மோகன்தாஸ், மணவாளன் மூவருமே உணர்ந்திருந்ததனால் அவர்கள் அதற்கு இணங்கவில்லை. -

அவர்கள் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே எப்படியோ தகவல் தெரிந்து கண்ணுக்கினியாளும், வேறு சில மாணவிகளும் அங்கே வந்துவிட்டார்கள். கண்ணுக் கினியாள் கூறினாள்:

“நான் வார்த்தைக்கு வார்த்தை படித்துப் படித்துச் சொல்லி எச்சரித்தேன் அண்ணாச்சி! அவர் கவனக் குறை வாக இருந்ததால்தான் எல்லாமே கெட்டுப்போய்விட்டது.” இதைச் சொல்லும்போது அவள் கண்களில் நீர் நெகிழ்ந்து விட்டது.

“ஒன்றுமே கெடவில்லை தங்கச்சி! மணவாளன் கூப்பிடுகிறார்னு பொய் சொல்லித் தூக்கக் கலக்கத்திலே தம்பியை ஏமாத்திட்டாங்க... மணவாளன் மேலிருந்த பிரியத்திலே தம்பி ஏமாந்திடுச்சு. கவலைப்படாமே நீயும் மற்றத் தங்கச்சிகளும் திரும்பிப் போங்க. நாளைப் பொழுது விடியறப்போ தம்பி நம்மோட காப்பி குடிக்க இங்கே இருக்கும். அதுக்கு நானாச்சு” என்று அண்ணாச்சி உறுதி கூறி அவளையும் மற்ற மாணவிகளையும் விடுதிக்குத் திருப்பி அனுப்பினார். அப்புறம் உள்ளூரில் பிரபல வியாபாரிகளில் தேசப்பற்று நிறைந்த ஒருவருக்கு ஃபோன் பண்ணி ஒரு லாரியை வரவழைத்தார். லாரியில் சிலம்பக் கழிகள் பத்துப் பன்னிரண்டு, டார்க் லைட்டுகள் நாலைந்து எல்லாம் வைக்கப்பட்டன.

அன்று மாலை ஆறு மணி சுமாருக்கு அண்ணாச்சி யும், மோகன்தாஸ், மணவாளன், பொன்னையா முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/98&oldid=608737" இலிருந்து மீள்விக்கப்பட்டது