பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டுமென்று செய்யப்படும் பலாக்காரச் செயல் களோ அல்லது பிடிவாதமாக நடத்திவரும் கலகங்களோ நிகழ்ந்தால் அப்பொழுது அரசாங்கத்துடனும் ஜனங்க ளுடனும் செய்யும் போராட்டத்தில் உண்ணுவிரதத்துக்கு இடமுண்டு. இறக்கும் வரை நடத்தும் உண்ணுவிாக மானது சக்தியாக்கிரக முறையில் ஒரு சாராம்சமான பகுதியாகும். சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அதுவே அதிகமான பலன் தாக்கூடிய சத்யாக்ரக ஆயுதமாக யிருக்கும். ஆல்ை அதைப் பயிற்சி பெருதவர்கள் உப யோகித்தலாகாது. அஹிம்சை எ ன்பது எதிரிக்குத் துன் பம் செய்யாமல் அவர் செய்யும் துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் அதிக ஆற்றல் வாய்ந்த அன்பு சக்தியாகும். எதிரியின் சிறந்த அம்சத்தை வேலே செய்யும்படி தாண்டு வதே அதன் நோக்கம். துன்பம் செய்தல் எதிரியின் இழிந்த அம்சத்தைக் துண்டும் , துன்பம் கோற்றல் எதிரி யின் உயர்ந்த அம்சத்தைத் துண்டும். அப்படி உயர்ந்த அம்சத்தைத் துண்டுவதற்குச் சரியான சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படும் உண்ணுவிரதத்தை விடச் சிறந்த வழி கிடையாது. 2 o உண்ணுவிரதமாகிய ஆயுதத்தை உபயோகிக்க விசேஷமான சாமர்த்தியம் தேவை. அந்த வித்தையில்