பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக்ரகம் படிச் செய்யின் அத்துன்பங்களே அவர்களுக்கு ஆனக் தத்தை அளிக்கும்.# சக்தியாக்ரகத்திற்கு இவ்விதமான பொருள் கொண்டோமேயானல், சத்தியாக் ரகமே சரீர வலிமையைவிட மேலானது என்றும் சரீர வலிமையை உப யோகிப்பதற்கு வேண்டிய மனே தைர்யத்தை விட சத்தி யாக்ாகத்தை உபயோகிப்பதற்கு அதிகமான மனே தைர் யம் வேண்டுமென்றும் எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் சத்யாக்ரகத்தை அனுஷ்டிக்கும் பொழுது உடனே அதை விட்டு சரீர சக்தியை உபயோகிப்பதில் எவ்விதத்திலும் இறங்க முடியாது. ஆன்ம சக்தியை உப யோகித்து ஐயமடைவதற்கு வேண்டிய தெல்லாம் ஆன்மா வேறு, சரீரம் வேறு, ஆன்மா அழிவற்றது, மேலானது என்று ஒப்புக் கொள்வது ஒன்றுதான். ஆல்ை கம் அறிவு மட்டும் ஒப்புக் கொண்டால் போதாது. மனமொப்பி அதுஷ்டானத்தில் கொண்டு வருவதற்கு வேண்டிய கம்பிக் கையும் இருக்க வேண்டும். -- 4 சத்யாக்ரகம் என்பது சத்ய சக்தியாகும். டால்ஸ் டாய் என்பவர் அதை ஆன்மசக்தி அல்லது அன்பு சக்தி என்று கூறியிருக்கிருர். அது உண்மையே. எவ்வளவு அாரம் அதை அனுஷ்டிக்க முடியுமோ, அவ்வளவு தாரம் அதை அனுஷ்டித்தால், அதற்குப் பொருளுதவி அல்லது அதைப் போன்ற இதர உலக வுதவிகள் ஒன்றும் தேவை யில்லை, புஜபலம் அல்லது பலாத்காரம் கிஞ்சித்தும் வேண் டியதில்லை என்பதும் நிச்சயம். மேலும் பலாத்காரம் இப் பெரிய ஆன்மசக்திக்கு எதிர்மறையாகும். பலாத்கா ாத்தை முற்றிலும் விலக்கியவர்களே இவ் வான்ம சக்தி யைக் கையாளவும் விர்த்தி செய்யவும் முடியும். இக் சக் தியைத் தனிப் பட்டவர்களும் ஜன சமூகங்களும் உபயோ கிக்கலாம். ராஜிய கார்யங்கள், குடும்பக் கார்யங்கள்